என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஒடிசாவைச் சேர்ந்த ராமச்சந்தர் என்பவரை வெறிநாய் கண்டித்துள்ளது.
    • ரேபிஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது,

    வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த புலம் பெயர் தொழிலாளி ராம் சந்தர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஒடிசாவைச் சேர்ந்த ராம் சந்தர் என்பவருக்கு வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், மருத்துவமனையில் அறிவிப்பு பலகையின் கண்ணாடியை உடைத்து கழுத்தை அறுத்து தனது உயிரை மாய்த்து அவர் கொண்டார் .

    • ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறுகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் தோல்வி அடைந்தார்.

    பர்மிங்காம்:

    ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டி வரும் 16-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென், தைவானின் சு லீ யாங் உடன் மோதினார்.

    பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் முதல் செட்டை லக்ஷயா சென் 13-21 என இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட லக்ஷயா சென் அடுத்த இரு செட்களை 21-17, 21-15 என்ற செட் கணக்கில் போராடி வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் முதல் சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து விலகினார்.

    • சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாவனா நடிகையாக அறிமுகமானார்.
    • நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்பொழுது தி டோர் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாவனா நடிகையாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து வெயில், தீபாவளி, கூடல் நகர், ராமேஷ்வரம் மற்றும் அசல் போன்ற திரைப்படங்களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

    நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்பொழுது தி டோர் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஜெயா தேவ் இயக்கியுள்ளார். இது ஒரு திரில்லர் கதைக்களத்துடன் அமைந்துள்ளது. இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமன் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஜெயபிரகாஷ் , சிவரஞ்சனி மற்றும் பாலா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படத்தின் இசையை வருண் உன்னி மேற்கொள்கிறார். படத்தின் டீசரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. திரைப்படம் ஹாரர் திரில்லராக அமைந்துள்ளது படம் இம்மாதம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்" என்று தர்மேந்திரா பிரதான் தெரிவித்தார்.
    • பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழருக்கும், தமிழகத்திற்கும் எதிரானது அல்ல

    நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கியது அப்போது தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "பாஜக ஆளாத மாநிலங்களான கர்நாடகா, இமாச்சல பிரதேசத்திலும் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது. தமிழ்நாட்டு மாணவர்களை, திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது.

    தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து, திமுக எம்.பி.க்களின் கடும் கண்டனத்தை அடுத்து தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

    இந்நிலையில்,இன்று மாநிலங்களவையில் உரையாற்றிய தர்மேந்திர பிரதான், பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டம் குறித்து பேசியதால் எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

    அப்போது திமுக எம்.பி. திருச்சி சிவாவுக்கும் தர்மேந்திர பிரதானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    மாநிலங்களவையில் பேசிய தர்மேந்திர பிரதான், "யாருடைய மனதும் புண்படும்படி பேசி இருந்தால் 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழருக்கும், தமிழகத்திற்கும் எதிரானது அல்ல. அவையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவமதித்தவர்கள் எனக்கு பாடம் எடுப்பதா?" என்று தெரிவித்தார்.

    • அடிப்படை பணி முதல் உயர் நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் வரை பாலியல் உணர்திறன் பயிற்சி அளிக்க வேண்டும்.
    • அரசு பணிகளுக்கு பாலியல் உணர்திறன் பாடத்தில் தேர்ச்சியை கட்டாயமாகக் வேண்டும்.

    தமிழகத்தில் சமூக நலத்துறையில் இருந்து பிரித்து மகளிர் மேம்பாட்டுக்கென தனித்துறையை ஏன் உருவாக்க கூடாது?. அடிப்படை பணி முதல் உயர் நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் வரை பாலியல் உணர்திறன் பயிற்சி அளிக்க வேண்டும். அரசு பணிகளுக்கு பாலியல் உணர்திறன் பாடத்தில் தேர்ச்சியை கட்டாயமாகக் வேண்டும். நிறுவனங்கள் உருவாக்கத்தில் பாலியல் உணர்திறன் தகுதிச் சான்றிதழை கட்டாயப்படுத்தவும். பரிந்துரைகள் குறித்து சம்பந்தப்பட்ட அரசு செயலர்களிடம் கலந்து பேசி செயல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • பரத் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் பூஜை விழா இன்று நடைப்பெற்றது.
    • படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் அனைவரும் இந்த பூஜை விழாவில் கலந்துக் கொண்டனர்.

    நடிகர் பரத் ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் திரைப்படத்திற்கு பிறகு காளிதாஸ் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

    இந்நிலையில் பரத் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் பூஜை விழா இன்று நடைப்பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குனரான எம். குரு இயக்குகிறார். படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் அனைவரும் இந்த பூஜை விழாவில் கலந்துக் கொண்டனர்.

    இப்படத்தில் சசிக்குமார் மற்றும் சத்யராஜ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேகா ஷெட்டி மற்றும் மாளவிகா கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் எம்.எஸ் பாஸ்கர், ஆடுகளம் நரேன், கஞ்சா கருப்பு, இந்துமதி மற்றும் ஜோ மல்லூரி நடிக்கவுள்ளனர்.

     

    படத்தின் ஒளிப்பதிவை சதீஷ் குமார் மற்றும் இசையமைப்பை என்.ஆர் ரகுநந்தன் இசையமைக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பட்டுக்கோட்டை, மன்னார்குடி, தஞ்சாவூர், வேதாரன்யம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைப்பெற இருக்கிறது. இப்படத்தை தர்மராஜ் வேலுசாமியின் ஸம்பாரா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விளம்பரப் பலகைகளை நிறுவ அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக புகார்
    • மார்ச் 18 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    2019 ஆம் ஆண்டு டெல்லியின் துவாரகா பகுதியில் பெரிய விளம்பரப் பலகைகளை நிறுவ அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படும் வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த புகாரில் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ குலாப் சிங் மற்றும் துவாரகா கவுன்சிலர் நிதிகா சர்மா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அதன் அறிக்கையை மார்ச் 18 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • 2026-ல் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் திமுக தற்போது நாடகங்களை மேற்கொண்டு இருக்கிறது.
    • இந்த முறை மக்கள் திமுக-விற்கு வாக்களிக்க போவதில்லை. அதிமுக-தான் வெற்றிபெறும்.

    தமிழகத்தில் மும்மொழி கொள்கை மூலமாக இந்தியை திணிக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு முயன்று வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    இந்த நிலையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை, "மும்மொழி கொள்கை, இந்தி திணிப்பு அனைத்தையும் செய்தது காங்கிரஸ். 2026-ல் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் திமுக தற்போது நாடகங்களை மேற்கொண்டு இருக்கிறது. இந்த முறை மக்கள் திமுக-விற்கு வாக்களிக்க போவதில்லை. அதிமுக-தான் வெற்றி பெறும்" என்றார்.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது.
    • பாகிஸ்தானின் மோசமான தோல்விக்கு பல முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    கராச்சி:

    சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. ஆனால் தொடரை நடத்திய பாகிஸ்தான் அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது. கிட்டத்தட்ட 30 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் நடத்தப்பட்ட சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி முதல் அணியாக தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது. புள்ளிப் பட்டியலிலும் கடைசி இடம் பிடித்தது.

    இதற்கிடையே, பாகிஸ்தானின் இந்த மோசமான தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை பல முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிடி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடியுள்ளார்.

    நான் சில நாட்களுக்கு முன் லாகூரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரை சந்தித்தேன். மைதானத்தை மேம்படுத்த அவர் செய்த முன்முயற்சிகள் அனைத்தும் நன்றாகவே இருந்தது. அவர் மேலும் கடாஃபி மைதானத்தை மெருகேற்ற விரும்புகிறார். ஆனால் அவர் என்னிடம் கிரிக்கெட்டை பற்றி ஒன்றுமே தெரியாது என கூறினார்.

    உங்களுக்கு கிரிக்கெட்டை பற்றி ஒன்றுமே தெரியாது என்றால், கிரிக்கெட் பற்றி நன்கு தெரிந்த வல்லுநர்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.

    பாகிஸ்தான் தேர்வுக் குழுவில் தொடங்கி இயக்குநர்கள் வரை நாம் பார்க்கும் அத்தனை பேருக்கும் கிரிக்கெட் பற்றி ஒன்றுமே தெரியாது. அவர்கள் அங்கு என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை.

    கிரிக்கெட்டை பற்றி ஒன்றுமே தெரியாதவர்களை வைத்துக்கொண்டு எப்படி உங்களால் கிரிக்கெட்டின் உள்கட்டமைப்பை சரிசெய்ய முடியும்? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாவலர்கள் சரியாக இருந்தால் தான் அணியும் முன்னேற்றம் அடையும்.

    நாம் எப்போதும் தயாரிப்புகளைப் பற்றிப் பேசுகிறோம், ஒரு நிகழ்வு வந்து தோல்வியடையும் போது அறுவை சிகிச்சை பற்றிப் பேசுகிறோம். உண்மை என்னவென்றால் தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஐ.சி.யூவில் உள்ளது என தெரிவித்தார்.

    • ஏர்டெல்லின் சில்லறை விற்பனைக் கடைகளில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
    • மத்திய அரசு விதித்த டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை ஸ்பேஸ் எக்ஸ் ஏற்காமல் இருந்தது.

    எலான் மஸ்க்கின் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவைகளை வழங்கி வருகிறது.

    இந்நிலையில் இந்த சேவையை இந்தியாவிற்கு கொண்டு வர தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதை ஏர்டெல் நிறுவனம் இன்று (செய்வ்வாய்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இந்த ஒப்பந்தம் ஸ்பேஸ்எக்ஸ், இந்தியாவில் ஸ்டார்லிங்க்கை விற்பனை செய்வதற்கான அங்கீகாரங்களைப் பெறுவதற்கு உட்பட்டது என்று அறிக்கையில் ஏர்டெல் தெரிவித்துள்ளது.

    மேலும், ஏர்டெல்லின் சில்லறை விற்பனைக் கடைகளில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாவும் ஏர்டெல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .

    முன்னதாக இந்தியாவில் செயல்படுவதற்கான GMPCS உரிமம் என்றும் அழைக்கப்படும் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை உரிமத்தை பெற மத்திய அரசு விதித்த டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை ஸ்பேஸ் எக்ஸ் ஏற்காமல் இருந்தது.

    இதற்கிடையே கடந்த மாதம் விதிகளுக்கு உட்பட்டு ஸ்பேஸ் எக்ஸ் கையெழுத்திட்டு உரிமத்தை விரைவில் பெறும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது முதற்கட்டமாக ஏர்டெல் உடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 

    • சமக்கல்வி கையெழுத்து இயக்கத்திற்குப் பெருமளவில் ஆதரவளித்து வருகின்றனர்.
    • யாரோ எழுதிக் கொடுப்பதை வைத்து கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

    சென்னை:

    பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    தி.மு.க.வின் அறுபதாண்டு கால பொய்ப் பித்தலாட்டங்களைத் தமிழக மக்கள் முழுமையாகப் புரிந்து கொண்டு, சமக்கல்வி கையெழுத்து இயக்கத்திற்குப் பெருமளவில் ஆதரவளித்து வருகின்றனர்.

    ஆனால், நாட்டு நடப்பே தெரியாமல், யாரோ எழுதிக் கொடுப்பதை வைத்து கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    கண்களைத் திறந்து பாருங்கள் முதலமைச்சரே, உங்கள் போலி நாடகத்தை நம்பி ஏமாற இது 1960கள் அல்ல.

    அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான, சமமான கல்வி கிடைப்பதை இனியும் உங்களால் தடுக்க முடியாது என பதிவிட்டுள்ளார் .

    • மார்ச் முதல் மே மாதம் வரை மூன்று மாதங்களுக்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட உத்தரவு.
    • மார்ச் முதல் மே மாதம் வரை மாதம் ஒன்றிற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட உத்தரவு.

    காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 38-ஆவது கூட்டம் இன்று நடைபெற்றது. காவிரி ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா மாநில அரசின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாட்டின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் நீர் இருப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கர்நாடகா காவிரியில் இருந்து தர வேண்டிய நீர் விவகாரம், நீர்த்திறப்பு தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    பின்னர், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    மார்ச் முதல் மே மாதம் வரை மூன்று மாதங்களுக்கு, மாதம் ஒன்றிற்கு 2.5 டி.எம்.சி. என்ற வகையில் 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது.

    ×