பாவனா நடித்த `The Door' படத்தின் டீசர் வெளியானது

சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாவனா நடிகையாக அறிமுகமானார். நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்பொழுது தி டோர் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
பாவனா நடித்த `The Door' படத்தின் டீசர் வெளியானது
Published on

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாவனா நடிகையாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து வெயில், தீபாவளி, கூடல் நகர், ராமேஷ்வரம் மற்றும் அசல் போன்ற திரைப்படங்களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்பொழுது தி டோர் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஜெயா தேவ் இயக்கியுள்ளார். இது ஒரு திரில்லர் கதைக்களத்துடன் அமைந்துள்ளது. இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமன் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஜெயபிரகாஷ் , சிவரஞ்சனி மற்றும் பாலா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் இசையை வருண் உன்னி மேற்கொள்கிறார். படத்தின் டீசரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. திரைப்படம் ஹாரர் திரில்லராக அமைந்துள்ளது படம் இம்மாதம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com