என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சரே, உங்கள் போலி நாடகத்தை நம்பி ஏமாற இது 1960கள் அல்ல: அண்ணாமலை
- சமக்கல்வி கையெழுத்து இயக்கத்திற்குப் பெருமளவில் ஆதரவளித்து வருகின்றனர்.
- யாரோ எழுதிக் கொடுப்பதை வைத்து கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னை:
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
தி.மு.க.வின் அறுபதாண்டு கால பொய்ப் பித்தலாட்டங்களைத் தமிழக மக்கள் முழுமையாகப் புரிந்து கொண்டு, சமக்கல்வி கையெழுத்து இயக்கத்திற்குப் பெருமளவில் ஆதரவளித்து வருகின்றனர்.
ஆனால், நாட்டு நடப்பே தெரியாமல், யாரோ எழுதிக் கொடுப்பதை வைத்து கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கண்களைத் திறந்து பாருங்கள் முதலமைச்சரே, உங்கள் போலி நாடகத்தை நம்பி ஏமாற இது 1960கள் அல்ல.
அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான, சமமான கல்வி கிடைப்பதை இனியும் உங்களால் தடுக்க முடியாது என பதிவிட்டுள்ளார் .
Next Story






