search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீமான்
    X
    சீமான்

    தேர்தல் ஆணையம் பணம் பட்டுவாடாவை தடுக்கவில்லை - சீமான் குற்றச்சாட்டு

    கோவையில் பணம் கொடுக்கப்பட்ட வீடுகளின் கதவுகளில் ‘பெய்டு’ என்று எழுதி இருந்தது தேர்தல் ஆணையத்தின் கண்களில் தெரியவில்லையா என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வளசரவாக்கத்தில் வாக்களித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ஜனநாயகத்தில் இது ஒரு கூத்து. தேர்தல் ஆணையமே ஒரு நாடக கம்பெனிதான். பணப்பட்டுவாடாவை பிடிக்க பறக்கும்படை என்கிறார்கள். அவர்கள் சாலையில் போவோர் வருவோரைத்தான் பிடிக்கிறார்கள்.

    தொகுதிகள் முழுவதும் பணப்பட்டுவாடா நடந்தது எல்லோருக்கும் தெரியும். யாரை பிடித்தார்கள். பணம் கொடுத்ததாக ஒரு வேட்பாளரை பிடித்து 10 ஆண்டு தேர்தலில் நிற்க முடியாமல் செய்யுங்கள் பார்ப்போம். அப்படியானால் தான் மற்றவர்களுக்கு பயம் வரும்.ஆனால் தேர்தல் ஆணையம் அதையெல்லாம் செய்யாது.

    கோவையில் பணம் கொடுக்கப்பட்ட வீடுகளின் கதவுகளில் ‘பெய்டு’ என்று எழுதி இருந்தார்கள். எங்கள் கண்களுக்கு தெரிவது தேர்தல் ஆணையத்தின் கண்களுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை. கேடுகெட்ட பண நாயகம் இருக்கும் வரை கேலிக்கூத்தாகத்தான் இருக்கும்.

    இந்தியா முழுவதும் 7 கட்டமாக தேர்தலை நடத்துகிறார்கள். ஆனால் ஒரு சிறிய மாநிலமான மேற்கு வங்காளத்தில் 8 கட்ட தேர்தலாம். டிஜிட்டல் இந்தியா என்று பெருமையாக சொல்கிறீர்கள். அது இதுதானா?

    வாக்குப்பதிவு முடிந்து எண்ணுவதற்கு ஒரு மாத இடைவெளி. அதுவரை பெட்டியை அடைத்து வைக்கிறார்கள். இதெல்லாம் என்ன நடைமுறை? ஏதோ நடக்கிறது. இதில் நாங்களும் போட்டியிடுகிறோம். வாக்களிக்கிறோம். அவ்வளவு தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×