என் மலர்

  செய்திகள்

  சாம்சங் கேலக்ஸி ஜெ7 நெக்ஸ்ட் இந்தியாவில் வெளியானது
  X

  சாம்சங் கேலக்ஸி ஜெ7 நெக்ஸ்ட் இந்தியாவில் வெளியானது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ7 நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
  புதுடெல்லி:

  சாம்சங் கேலக்ஸி ஜெ7 நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. ஜெ7 சீரிஸ்-இன் புதிய ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 7870 பிராசஸர், ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் மற்றும் 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 

  முன்னதாக சாம்சங் ஜெ7 (2017) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையிஸ் புதிய ஜெ7 நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

  சாம்சங் கேலக்ஸி ஜெ7 நெக்ஸ்ட் சிறப்பம்சங்கள்

  * 5.5 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
  * 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 பிராசஸர்
  * 2 ஜிபி ரேம்
  * 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
  * மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  * ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
  * டூயல் சிம் ஸ்லாட்
  * 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/1.7 அப்ரேச்சர்
  * 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.2 அப்ரேச்சர்
  * 4ஜி வோல்ட்இ, வை-பை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ்
  * 3000 எம்ஏஎச் பேட்டரி

  சாம்சங் கேலக்ஸி ஜெ7 நெக்ஸ்ட் பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைப்பதோடு, இந்தியாவில் ரூ.11,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய கேலக்ஸி ஜெ7 நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் சாம்சங் ஆன்லைன் தளம், அமேசான் மற்றும் ஆஃப்லைன் முறையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
  Next Story
  ×