என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- மறைமுகமாக பணம் கொடுக்கவும், செய்த ஊழலில் உங்களையும் உட்படுத்தவும் முயற்சிக்கின்றனர்.
- எனவே இதுவே சரியான தருணம். மயக்கத்திலிருந்து தெளிந்து வாருங்கள். நாம் ஒருங்கிணைந்து போராடுவோம்.
பா.ம.க. தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
என் உயிரினும் மேலான, என் உயிரை விட மேலான பாட்டாளி சொந்தங்களே வணக்கம் நான் நலம்! நீங்கள் நலம்தானே…?
நான் பொது வாழ்விற்கு வந்தபோது கிராமத்திற்கு 25 இளைஞர்களை என்னிடம் கொடுங்கள் தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகிறேன் என்று அன்றே சொன்னேன். ஆனால் மக்களின் வாழ்கைத் தரம் உயரவும் சமூக ஏற்றத்தாழ்வுகளை களைந்து சமத்துவ சமூகம் உருவாக்க சமூக நீதி பற்றிய தெளிவில்லாத ஆட்சியாளர்கள் போதைக்கும், இலவசத்திற்கும் மக்களை அடிமைப்படுத்திவிட்டனர்.
தமிழகத்தில் தற்போது நாள்தோறும் பல்வேறு துறையினர் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர்.
அதனைக் காதுகொடுத்து கேட்கக்கூட நாதியில்லை. ஆனால் வாக்குக்கு இப்போதே மறைமுகமாக பணம் கொடுக்கவும், செய்த ஊழலில் உங்களையும் உட்படுத்தவும் முயற்சிக்கின்றனர். எனவே இதுவே சரியான தருணம். மயக்கத்திலிருந்து தெளிந்து வாருங்கள். நாம் ஒருங்கிணைந்து போராடுவோம். கடந்த காலங்களில் நாம் போராடித்தான் உரிமைகளைப் பெற்றோம். இங்கு போராடாமல் எதுவும் கிடைக்காது.
வரும் தேர்தலில் அரசியல் அதிகாரம் பெற்று சாதிவாரிக் கணக்கெடுத்து அனைத்து சாதியினருக்கும் விகிதாச்சார இட ஒதுக்கீடு உள்ளிட்டவைகள் கிடைக்க ஆவன செய்வோம். மனித வளத்தை மேம்படுத்த, சமூக ஒற்றுமையை வளர்க்க, ஊழலையும், துரோகத்தையும் துடைத்தெரிய சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவோம்.
நம்மை நாமே தூற்றிக்கொள்வது நம்மை மயக்கம் தெளியாமல் பார்த்துக்கொள்வோருக்கு ஆதாயம் கிடைக்க வழிவகுக்கும். புரிந்துகொண்டு என்னுடன் தொடர்ந்து பயணிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து உங்களோடு பேசுவேன்.
இவ்வாறு பா.ம.க. தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது
- மாநிலங்களவை எம்.பி. கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.
அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுக தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என விஜய் கூறியுள்ளது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,"பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும்" என்றார்.
நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து மாநிலங்களவை எம்.பி. கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "அது அவங்க அரசியல்.. என் அரசியல் இல்ல" என்று தெரிவித்தார்.
- பெண்கள் வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டது
- திராவிட மாடல் 2.0-ல் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்.
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் நேற்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பண மாக ரூ.3 ஆயிரம் மற்றும் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்.
வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம். திராவிட மாடல் 2.0-ல் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி! வெல்வோம் ஒன்றாக" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ரூ.5000 உரிமைத்தொகை அளித்தபின் மகளிருக்கு முதலமைச்சர் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த குறுஞ்செய்தியில், "அன்பு சகோதரிக்கு வணக்கம்! மகளிரின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில்", உங்கள் வங்கிக் கணக்கிற்கு நேற்று ரூ.5000 அனுப்பி வைத்துள்ளோம். இதனை உங்கள் அத்தியாவசிய தேவைக்கும், சேமிப்புக்கும் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நிலோபர் கபில் இருந்தார்.
- அதிமுகவில் இருந்து விலகுவதாக எடப்பாடி பழனிசாமிக்கு நிலோபர் கபில் கடிதம் எழுதியிருந்தார்.
திருப்பத்தூர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபில் திமுகவில் இணைந்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை தொடர்ந்து நிலோஃபர் கபிலும் திமுகவில் இணைந்துள்ளார். முன்னதாக அதிமுகவில் இருந்து விலகுவதாக எடப்பாடி பழனிசாமிக்கு நிலோபர் கபில் கடிதம் எழுதியிருந்தார்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நிலோபர் கபில் இருந்தார். இவர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 12 மீனவர்களில் 9 பேரை யாழ்ப்பாணம் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
- விடுவிக்கப்பட்ட மீனவர்கள் உடனடியாக தாயகம் திரும்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி கடிதம்.
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 12 தமிழக மீனவர்களில், 9 மீனவர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில் மூன்று மீனவர்களுக்கு ஆறு மாத கடுங்காவல் சிறைத்தண்டனையும், இலங்கை ரூபாய் மதிப்பில் தலா 11.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, விடுவிக்கப்பட்ட மீனவர்கள் உடனடியாக தாயகம் திரும்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் மற்றும் 28.12.2025 அன்று மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் என மொத்தம் 12 தமிழக மீனவர்களில், 9 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று மீனவ படகு ஓட்டுநர்களுக்கு ஆறு மாத கடுங்காவல் தண்டனையும், இலங்கை ரூபாய் மதிப்பில் தலா 11.60 லட்சம் அபராதமும், அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் கூடுதலாக மூன்று மாத சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 9 மீனவர்களும் 05.02.2026 அன்று மிரிஹானா தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். தாயகம் திரும்புவதில் உள்ள நடைமுறை தாமதம் காரணமாக அவர்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நம் நாட்டு மீனவர்கள் அங்கு சந்திக்கும் கடினமான சூழ்நிலையையும், மீனவர்களின் குடும்பங்கள் இங்கு எதிர்கொள்ளும் துயரங்களையும் கருத்தில் கொண்டு, விடுவிக்கப்பட்ட மீனவர்களை விரைவில் தாயகம் திரும்ப தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
- வியாபாரிகள், விவசாயிகள், தொழில்முனைவோர், பொதுமக்கள் ஆகியோரிடம் கருத்துக்களை கேட்டறிந்து வருகின்றனர்.
- கருத்து கேட்பு கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மகாலில் இன்று நடைபெற்றது.
பல்லடம்:
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வியாபாரிகள், விவசாயிகள், தொழில்முனைவோர், பொதுமக்கள் ஆகியோரிடம் கருத்துக்களை கேட்டறிந்து வருகின்றனர்.
இக்குழு சார்பில் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், தொழில் முனைவோரிடம் கருத்து கேட்பு கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மகாலில் இன்று நடைபெற்றது.
இதில் 2 மாவட்டங்களை சேர்ந்த தொழில் அமைப்பினர், ஜவுளி உற்பத்தியாளர்கள், கறிக்கோழி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். கனிமொழி எம்.பி., பங்கேற்காததால் அமைச்சர்கள் முத்துசாமி ,கோவி.செழியன், கயல்விழி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் மனுக்களை வாங்கி கருத்துக்களை கேட்டறிந்தனர்.
- பல்வேறு பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் நர்சரி அமைத்து காரநேசன், கொய்மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ரோஜா பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
கொடைக்கானல்:
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் காதல் ஜோடிகள் சுற்றுலா தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வரும் நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று காலை முதலே பல்வேறு ஊர்களில் இருந்து காதலர்கள் கொடைக்கானலுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
மோட்டார் சைக்கிள், கார் மற்றும் பல்வேறு வாகனங்களில் அவர்கள் கொடைக்கானலுக்கு வந்து இங்குள்ள பிரையண்ட் பூங்கா, ஏரிச்சாலை, கோக்கர்ஸ் வாக், குணாகுகை உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். மேலும் ஏரியில் அமர்ந்து படகு சவாரி செய்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பெரும்பாலான சுற்றுலா தலங்களில் காதல் ஜோடிகள் தனித்தனியாக அமர்ந்து காதல் ரசம் சொட்டச்சொட்ட பேசி மகிழ்ந்தனர்.
காதலர் தினம் என்றாலே அன்பை பரிமாறிக்கொள்ள பரிசுப்பொருட்கள் வழங்குவது வழக்கம். அதில் ரோஜாவுக்கு முதலிடம் உண்டு. கொடைக்கானல் மலை கிராமங்களான குண்டுபட்டி, கவுஞ்சி, மன்னவனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் நர்சரி அமைத்து காரநேசன், கொய்மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ரோஜா பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே ரோஜா பூக்கள் அனுப்பி வைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்தது. 10 பூக்கள் கொண்ட ஒரு பூங்கொத்து ரூ.100க்கு விற்பனையான நிலையில் இன்று காலையில் ரூ.200க்கு விற்கப்பட்டது. நேரம் செல்லச்செல்ல அந்த பூக்களும் விற்று தீர்ந்ததால் ரூ.50 முதல் ரூ.150 வரை விற்கப்பட்டது. இதனால் தாமதமாக வந்த காதலர்கள் தங்களுக்கு ரோஜா கிடைக்க வில்லையே என ஏமாற்றம் அடைந்தனர்.
இதைத்தவிர வேறு சில பரிசு பொருட்களையும் காதல் ஜோடிகள் வாங்கி பரிசளித்து மகிழ்ந்தனர். இதேபோல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் திண்டுக்கல் மலைக்கோட்டை, சிறுமலை உள்ளிட்ட பகுதிகளிலும் காதல் ஜோடிகள் குவிந்து தங்கள் பொழுதை கழித்தனர்.
ஆண்டிபட்டி வைகை அணை பூங்காவில் வழக்கமாக அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தரும் நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு காலை முதலே பலர் வரத்தொடங்கினர். காதல் ஜோடிகள் பொது இடங்களில் சுற்றினாலோ, பூங்காவில் அமர்ந்து பொழுதை கழித்தாலோ அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் என இந்து அமைப்பினர் தெரிவித்தனர். இதனால் பூங்காவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காதலர் தினத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இரு வேறு தரப்பினர் பூங்காவிற்குள் வரத்தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு தவெக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
- செய்தியாளர்கள் தவெக நிர்வாகி செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பினர்.
சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.
அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுக தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என விஜய் கூறியுள்ளது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,"பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும்" என்றார்.
நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு தவெக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இது குறித்து செய்தியாளர்கள் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்வியால் கடுப்பான செங்கோட்டையன், "பாஜக ஒரு கட்சியா? நயினார் நாகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா?" என்று காட்டமாக தெரிவித்தார்.
- எட்டு திருவீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
- 7-ம் நாள் திருவிழாவான 27-ந் தேதி காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சண்முகப் பெருமான் உருகு சட்ட சேவை நடக்கிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான மாசித் திருவிழா வருகிற 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 5 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.
மாலை 4.30 மணிக்கு மேல் அப்பர் சுவாமிகள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதிகளில் உழவாரப்பணி செய்து கோவில் சேர்தல் நடக்கிறது. இரவு 7 மணிக்கு மேல் ஸ்ரீ பெலிநாயகர் அஸ்திர தேவருடன் தந்த பல்லக்கில் கோவிலில் இருந்து புறப்பட்டு 9 சந்திகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
2-ம் நாள் (22-ந் தேதி) காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி குமர விடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்மன் சிறிய பல்லக்கிலும் எழுந்தருளி தூண்டுகை விநாயகர் கோவிலுக்கு வடபுறம் உள்ள ஆண்டியப்பபிள்ளை மண்டபம் வந்து சேர்தல். அம்பாள் மட்டும் உள் திருவீதி 4 வெளி திருவீதி நான்கு ஆக 8 வீதிகளிலும் உலா வந்து மண்டகப்படி சேர்தல் நடக்கிறது.
இரவு 7 மணிக்கு மேற்படி மண்டபத்தில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும் அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி பரிவார மூர்த்திகளுடன் எட்டு திருவீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
3-ம் நாள் திருவிழா 23-ந்தேதி (திங்கட்கிழமை )காலை 7 மணிக்கு மேல் சுவாமி மேலகோவிலில் இருந்து பூங்கேடய சப்பரத்திலும், அம்மன் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி 8 வீதிகளில் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
மாலை 6.30 மணிக்கு மேல் சுவாமி தங்கமுத்து கிடா வாகனத்திலும் அம்மன் வெள்ளி அன்னவாகனத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
4-ம் திருவிழாவான 24-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மேல் சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும் அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து மேல கோவில் சேர்ந்தல் நடக்கிறது.
5-ம் திருவிழாவான 25-ந் தேதி (புதன்கிழமை) இரவு 7.30 மணி அளவில் குடைவரை வாயில் தீபாராதனையாகி சுவாமி, அம்பாள் தங்கமயில் வாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளில் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
6-ம் நாள் திருவிழா 26-ந் தேதி (வியாழக்கிழமை )காலை 7 மணிக்கு சுவாமி கோ. ரதத்தில் எழுந்தருளி 8 வீதிகளும் உலா வந்து பந்தல் மண்டபம் சேர்தல் நடக்கிறது. இரவு 8 மணிக்கு சுவாமி வெள்ளி தேரிலும், அம்மன் இந்திர விமானத்திலும் எழுந்தருளி 8 வீதிகளும் உலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடக்கிறது.
7-ம் நாள் திருவிழாவான 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சண்முகப் பெருமான் உருகு சட்ட சேவை நடக்கிறது.
காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் சண்முக விலாசத்தில் இருந்து வெற்றிவேர் சப்பரத்தில் ஏற்றத்தில் எழுந்தருளி பிள்ளையின் கட்டளை மண்டபம் சேர்தல் அங்கு அபிஷேகம் அலங்காரம் தீபாரதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் அங்கிருந்து சுவாமி சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
8-ம் திருவிழாவான 28-ந் தேதி (சனிக்கிழமை)காலை 6 மணிக்கு பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
9-ம் திருவிழாவான மார்ச்-1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது .
இரவு 8 மணிக்கு சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும் அம்மன் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் அடுத்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி (திங்கள்கிழமை)காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்கு மீன லக்னத்தில் நடக்கிறது
11-ம் திருவிழாவான 3-ந் தேதி ( செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு மேல் சுவாமி அம்மன் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி தெப்பக்குளம் மண்டகப்படி சேர்தல், அங்கு இரவு 10.30 மணிக்கு மேல் அபிஷேகம் அலங்காரமாகி சுவாமி தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றி வந்து மேலக்கோவில் சேர்தல் நடக்கிறது.
12-ம் திருவிழாவான 4-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் 8 வீதிகளிலும் வலம் வந்து 14 செங்குந்தர் முதலியார் திருமண மண்டபம் வந்து அங்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாரதனைக்கு பின் இரவு 9 மணிக்கு அம்மன் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடந்து விழா நிறைவு பெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- 19-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
- நாளை முதல் 19-ந்தேதி வரை வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் உருவாகக்கூடும்.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 18-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
19-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
20-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பனிமூட்டம் பற்றிய முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
நாளை முதல் 19-ந்தேதி வரை வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 15 ஆம் தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் 16-ந்தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
திருவள்ளூர், சேலம், தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 17 ஆம் தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 18 ஆம் தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 19 ஆம் தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:-
18-ந்தேதி மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
- அரசு மருத்துவமனையில் இருந்து கடத்திச் சென்ற குழந்தையை 8 மணி நேரத்தில் போலீசார் மீட்டுள்ளனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை மர்மநபர் ஒருவர் தடுப்பூசி போடுவதாக கூறிக் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தையை துறையூர் அருகில் போலீசார் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.
நட்பாக பழகி குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் எனக்கூறி பெண் ஒருவர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்திச் சென்ற குழந்தையை 8 மணி நேரத்தில் போலீசார் மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வன்னியர்களை திமுக ஏமாற்றி விட்டது. திமுக மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.
- காங்கிரஸ் கட்சியை திமுக-வே தோற்கடித்து விடும். பெற்றி பெற்றால்தானே ஆட்சியில் பங்கு கேட்பார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-
* பா.ம.க. நிறுவனர் ராமதாசை சுற்றியுள்ள தீய சக்திகள் அவரது மனதை மாற்றி விட்டார்கள்.
* பா.ம.க.-விற்குள் பதவி போட்டி சண்டை ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தியது திமுக-தான்.
* பாட்டாளி மக்கள் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென்று தொண்டர்களுக்கு அன்புமணி வலியுறுத்தல்
* பா.ம.க.-வின் எதிரி திமுக-தான்
* காங்கிரஸ் கட்சியை திமுக-வே தோற்கடித்து விடும். பெற்றி பெற்றால்தானே ஆட்சியில் பங்கு கேட்பார்கள்.
* வன்னியர்களை திமுக ஏமாற்றி விட்டது. திமுக மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.
* பாமக-வின் கட்சி, சின்னம் தொடர்பாக டாக்டர் ராமதாஸ் தரப்பில் இருந்து பொய்யை பரப்புகிறார்கள்.
* பா.ம.க. நிறுவனர் ராமதாஸை சுற்றியுள்ள தீய சக்திகள் அவரது மனதை மாற்றிவிட்டார்கள்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.






