என் மலர்

  நீங்கள் தேடியது "trichy govt hospital"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் திடீரென போராட்டம் நடத்தினர்.
  திருச்சி:

  திருச்சி அரசு மருத்துவமனையில் எலக்ட்ரிக்கல், பிளம்பர் உள்பட பல்வேறு பணிகளை ஒப்பந்த தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட சிகிச்சையில் இருந்து பெறப்படும் வருமானம் மூலம் மாத ஊதியம் வழங்கப்படுகிறது.

  கடந்த மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் இது குறித்து கேட்டபோது, மருத்துவமனை நிர்வாகம் முறையாக பதில் அளிக்காததால் நேற்று காலை திடீரென பணியை புறக்கணித்தனர். உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும். 

  சம்பளத்தொகையில் ஜி.எஸ்.டி. பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ரெங்கராஜன், துப்புரவு தொழிலாளர்கள் சங்க செயலாளர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

  இதையடுத்து மருத்துவமனை இருக்கை மருத்துவ அதிகாரி(ஆர்.எம்.ஓ.) செந்தில், கண்காணிப்பாளர் (பொறுப்பு) முரளிதரன் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அனைவருக்கும் சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் 65 வயது முதியவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  திருச்சி:

  திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சுமார் 65 வயது முதியவர் ஒருவர் உடல்நிலை சரியில்லாததால், உறவினர்கள் யாருமின்றி தனியாக வந்து சிகிச்சையில் சேர்ந்தார். 4-ந் தேதி முதல் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  அவரின் அனுமதி பதிவேட்டில் அவர், திருச்சி சுப்பிரமணியபுரம் ரெங்காநகரை சேர்ந்த சூசைராஜ் (வயது 65) என பதிவு செய்யப்பட்டிருந்தது. இது குறித்து அரசு ஆஸ்பத்திரி போலீசார் கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த முகவரி தவறானது என்று தெரியவந்தது. இறந்த முதியவர் வெள்ளை நிற வேஷ்டி மட்டுமே அணிந்துள்ளார். அவர் குறித்த வேறு எந்த தகவலும் தெரியவில்லை. 

  இது குறித்து திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீசார் மற்றும் கே.கே.நகர் போலீசார், இறந்த நபரின் புகைப்படத்தை வைத்து அவர் யார்? எதற்காக தவறான முகவரி அளித்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர் திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
  திருச்சி:

  திருச்சி காட்டூரை சேர்ந்தவர் மோகன், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். இவரது மகன் சுதர்சன் (வயது 24). இவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டராக பணி புரிந்து வந்தார்.

  இன்று காலை அரசு மருத்துவமனை எம்.எஸ்.1 வார்டில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கழிவறைக்கு சென்ற சுதர்சன் திரும்பி வரவில்லை. இதற்கிடையே கழிவறையை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்கள் சென்றுள்ளனர். அப்போது டாக்டர் சுதர்சன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். 

  அவரை மீட்டு அவசர சிகிச்சை மையத்திற்கு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அரசு ஆஸ்பத்திரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, இறந்த சுதர்சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுதர்சனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
  ×