என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி அரசு மருத்துவமனை"

    • சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • அரசு மருத்துவமனையில் இருந்து கடத்திச் சென்ற குழந்தையை 8 மணி நேரத்தில் போலீசார் மீட்டுள்ளனர்.

    திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை மர்மநபர் ஒருவர் தடுப்பூசி போடுவதாக கூறிக் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தையை துறையூர் அருகில் போலீசார் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.

    நட்பாக பழகி குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் எனக்கூறி பெண் ஒருவர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்திச் சென்ற குழந்தையை 8 மணி நேரத்தில் போலீசார் மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
    • பெரிய மிளகுபாறை நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பாசறை கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தந்தார்.

    பின்னர், பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    இதைதொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சில் பல்வேறு முக்கிய இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது, திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் அங்கு ஆய்வு மேற்கொண்டார். இதேபோல், பெரிய மிளகுபாறை நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.

    ×