பல்லடத்தில் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் தி.மு.க., தேர்தல் அறிக்கை குழுவினர் கருத்துக்கள் கேட்பு

வியாபாரிகள், விவசாயிகள், தொழில்முனைவோர், பொதுமக்கள் ஆகியோரிடம் கருத்துக்களை கேட்டறிந்து வருகின்றனர்.கருத்து கேட்பு கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மகாலில் இன்று நடைபெற்றது.
பல்லடத்தில் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் தி.மு.க., தேர்தல் அறிக்கை குழுவினர் கருத்துக்கள் கேட்பு
Published on

பல்லடம்:

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வியாபாரிகள், விவசாயிகள், தொழில்முனைவோர், பொதுமக்கள் ஆகியோரிடம் கருத்துக்களை கேட்டறிந்து வருகின்றனர்.

இக்குழு சார்பில் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், தொழில் முனைவோரிடம் கருத்து கேட்பு கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மகாலில் இன்று நடைபெற்றது.

இதில் 2 மாவட்டங்களை சேர்ந்த தொழில் அமைப்பினர், ஜவுளி உற்பத்தியாளர்கள், கறிக்கோழி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். கனிமொழி எம்.பி., பங்கேற்காததால் அமைச்சர்கள் முத்துசாமி ,கோவி.செழியன், கயல்விழி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் மனுக்களை வாங்கி கருத்துக்களை கேட்டறிந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com