என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நயினார் நாகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா... விஜய் - திரிஷா குறித்த பேச்சுக்கு செங்கோட்டையன் பதிலடி
- நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு தவெக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
- செய்தியாளர்கள் தவெக நிர்வாகி செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பினர்.
சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.
அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுக தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என விஜய் கூறியுள்ளது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,"பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும்" என்றார்.
நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு தவெக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இது குறித்து செய்தியாளர்கள் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்வியால் கடுப்பான செங்கோட்டையன், "பாஜக ஒரு கட்சியா? நயினார் நாகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா?" என்று காட்டமாக தெரிவித்தார்.






