என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் 22 வயது பெண்ணை 5 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
- மூவருக்கு வரும் 11-ந் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் 22 வயது பெண்ணை 5 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஆண் பெண் இருபாலரும் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் உள்ள உணவகத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த 56 வயது நபரான குணசேகர் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இதே உணவகத்தில் வேலை செய்த 22 வயது பெண்ணை குணசேகர் கல்லூரி வளாகத்திலேயே வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் 5 பேரும் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் அழுது கொண்டே கல்லூரியில் உள்ள காவலாளியிடம் வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்து உடனடியாக சைதாப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, குணசேகரன் கைது செய்யப்பட்டார். உணவக உரிமையாளரான அரசியல் பிரமுகர் கோட்டூர் செல்வம், நண்பர் கார்த்திக் ஆகியோரும் இந்த வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்த கேண்டீன் உரிமையாளர் முத்து செல்வம், அவரது நண்பர் கார்த்திகேயன், மாஸ்டஸ் குணசேகர் ஆகிய மூவருக்கு வரும் 11-ந் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- அமெரிக்காவின் பொருளாதாரம் மந்தமான சூழ்நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது.
- அமெரிக்க டாலரை அந்நிய செலவாணியாக கொண்டுள்ள நாடுகள் அதன் மதிப்பை தங்கமாக மாற்ற தொடங்கி இருக்கிறார்கள்.
தங்கம் விலை உயர்வுக்கான காரணங்கள் குறித்து தமிழ்நாடு தங்கம் மற்றும் வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது:-
உலக நாடுகள் தங்களிடம் உள்ள அந்நிய செலவாணியான அமெரிக்க டாலரை தங்கமாக மாற்ற தொடங்கியதே இந்த விலை உயர்வுக்கு காரணமாகும். தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருவதற்கு முக்கிய முதல் காரணம்.
அமெரிக்காவின் பல நடவடிக்கைகள் உலக அளவில் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனுடைய தொடக்கமாக அமெரிக்காவின் பொருளாதாரம் மந்தமான சூழ்நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது.
ஒரு வேளை அமெரிக்க பொருளாதாரம் மந்தமானால் அமெரிக்க டாலரின் மதிப்பிழப்பு ஏற்படும். ஏற்கனவே அமெரிக்க டாலரை அந்நிய செலவாணியாக கொண்டுள்ள நாடுகள் அதன் மதிப்பை தங்கமாக மாற்ற தொடங்கி இருக்கிறார்கள்.
அதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதுமட்டும் அல்லாமல் சமீபகாலமாக ஈரான் மீது போர் தொடுக்க வேண்டிய நோக்கத்தில் அமெரிக்கா போர்க் கப்பல்கள் சென்று கொண்டு இருக்கின்றன.
அது அங்கு சென்று போர் சூழல் ஏற்பட்டால் இன்னும் பெரிய அளவில் பாதிப்பை உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் உலகப் பொருளாதாரம் பெரிய கேள்விக் குறியை ஏற்படுத்தும் நிலை உருவாகும் எனக் கருதி பெரும்பாலான நாடுகள் அமெரிக்க டாலர்களை தங்கமாக மாற்ற தொடங்கி இருக்கிறார்கள். இது 2-வது முக்கிய காரணமாகும்.
இந்த இரண்டும் ஒரு சேர நடைபெற்று வருவதால் சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இன்னும் தங்கம் விலை எந்த அளவிற்கு உயரும் என்று கணக்கிட முடியாத அளவிற்கு உயரும். தங்கம் மட்டுமல்ல வெள்ளியின் விலையும் உயரும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சென்னையில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களால் தமிழகமே அதிர்ச்சி.
- எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்றும் வாய்கூசாமல் பொய்யையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்.
தலைநகர் சென்னையில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களால் தமிழகமே அதிர்ச்சியில் உள்ளதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்பதற்குச் சான்றாக நாள்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
தலைநகர் சென்னையில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
சென்னை அடையாறு பகுதியில் காவலாளியாக வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியும் அவர் மனைவியும் குழந்தையும் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், நந்தனத்தில் அரசுக் கல்லூரி கேண்டீனில் பணிபுரிந்த இளம்பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. இச்சம்பவங்கள், கடும் கண்டனத்திற்கு உரியவை.
தமிழ்நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, பிழைப்புக்காகத் தமிழ்நாட்டை நம்பி வந்தவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற சூழலைத்தான் இந்தக் கபட நாடகத் திமுக அரசு உருவாக்கி வைத்திருக்கிறது.
கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதால், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுப்பதிலும், சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் இந்த ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துவதில்லை. இதனால்தான் கல்வி நிறுவனங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரிக்கின்றன.
குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டிய அரசு, மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதால், கொடுங்குற்றங்களில் ஈடுபடச் சமூக விரோதக் கும்பல்களுக்குத் துணிச்சல் வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தர உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், முதல்வர் அவர்கள் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்றும், எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்றும் வாய்கூசாமல் பொய்யையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்.
ஆட்சியின் இறுதிக் கால நாள்களை எண்ணிக்கொண்டிருக்கும் முதல்வர் அவர்கள், இனி இருக்கும் கொஞ்சம் நாள்களிலாவது சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மக்களுக்கு எதிரான, மக்களுக்குக் கொஞ்சமும் பாதுகாப்பே இல்லாத, இந்த வெற்று விளம்பர மாடல் ஆட்சிக்கு முடிவுரை எழுதத் தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழகத்தில் அதிக அளவிலான பெண்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றுகிறார்கள் என்றார்.
- மதுபோதையில் கொன்றதாக கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பீகார் கூலி தொழிலாளி, அவரது மனைவி மற்றும் 2 வயது ஆண் குழந்தை கொலை செய்யப்பட்டதற்கு மது தான் காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்ற வாக்கியம் ஏட்டளவில்தான் என்பதற்கு சான்றுதான் பிகார் கூலி தொழிலாளி, அவரது மனைவி மற்றும் 2 வயது ஆண் குழந்தை கொலை. இக்கொலைக்கு அடிப்படைக்காரணம் மது.
ஒரு பெண், ஒரு குழந்தை இவர்களில் யாரையாவது கொல்ல வேண்டும் அல்லது அருகே உள்ள மதுவை அருந்தவேண்டும் என்ற கதைக்கேற்ப மதுவை அருந்திவிட்டு பெண்ணை அடைய தடையாக இருந்த குழந்தையை கொன்று பின் அப்பெண்ணையும் கொன்றதாக அக்கதை முடியும். ஆக மது அனைத்தையும் செய்யவைக்கும் என்பதே இக்கதையின் சாராம்சம்.
அண்மையில் தஞ்சையில் நடைபெற்ற திமுக மகளிர் மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கியதால்தான் தமிழகத்தில் அதிக அளவிலான பெண்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றுகிறார்கள் என்றார். அப்படி சொன்ன மறுநாளே தமிழகத்தையே உலுக்கிய கொடூர கொலை. வேலை கேட்டு நம்பி வந்த குடும்பத்தை நம்பிக்கை துரோகம் செய்து மதுபோதையில் கொன்றதாக கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஆனால் பஞ்சம் பிழைக்க வந்த வெளிமாநிலத்தவரையும் விட்டுவைக்காத மது போதை ஒரு குடும்பத்தையே நிர்மூலமாக்கியுள்ளது. பெண்கள் அச்சமின்றி வாழ இனியாவது மதுவை அறவே ஒழிக்க அரசு மதுகடைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கவேண்டும். இலவசங்களை அளிக்க மது வருவாயை தவிர்த்து வேறுவகையில் வருவாயை பெற பல வழிகள் உள்ளது" என்று தெரிவித்தார்.
- யாருக்காக 41 உயிர்கள் போனது? அவர் என்ன செய்திருக்க வேண்டும்.
- யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை, ஒரு அரசாங்கத்தை நடத்த அனுபவம் தேவை.
விஜய் சிறந்த நடிகர், ஆனால் சிறந்த அரசியல்வாதி நாங்கள் தான் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர்," எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்துவிட்டதாக விஜய் கூறுகிறார். யாருக்காக அவர் வந்தார்? என கரூர் துயர சம்பவத்தை சுட்டிக்காட்டி இபிஎஸ் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
இன்று 41 உயிர்களை இழந்துவிட்டோம், யாருக்காக 41 உயிர்கள் போனது? அவர் என்ன செய்திருக்க வேண்டும்
விஜய் பேச்சை கேட்பதற்காக வந்த கூட்டம்; நேரடியாக அங்கு சென்று பார்த்திருக்க வேண்டும், அதைக் கூட அவர் செய்யவில்லை
நாங்கள் நேரடியாக ஓடிச்சென்று ஆறுதல் கூறினோம்; ஆறுதல் கூட சொல்ல முடியாத விஜய் கட்சி நடத்தி என்ன பயன்?
விஜய் சிறந்த நடிகராக இருக்கலாம்; ஆனால் நாங்கள் சிறந்த அரசியல்வாதிகள்.
யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை, ஒரு அரசாங்கத்தை நடத்த அனுபவம் தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
- வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் பெயரை சேர்க்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. நவம்பர் 4-ந் தேதி இந்த பணி தொடங்கப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் 19 -ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதனால் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587-ஆக இருந்த தமிழக மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756-ஆக குறைந்தது.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் பெயரை சேர்க்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மேலும் 18 வயது பூர்த்தி செய்தவர்கள் புதிதாக வாக்காளர் பட்டியல் பெயர்களை சேர்க்கவும் கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி முதல் இந்த மாதம் 18-ந்தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு படிவங்கள் பெறப்படவில்லை. அதனால் ஜனவரி 30-ந்தேதி வரை பெயர் சேர்க்க அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. திமுக தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- கட்சிக்கு துரோகம் இழைத்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்.
- தேமுதிகவுடன் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை.
ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இணைய நான் தயார் என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்த நிலையில் அதனை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர்,"ஓபிஎஸ்-ஐ கட்சியை விட்டு நீக்கும் முடிவு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்பதால் அவரை சேர்க்க முடியாது.
கட்சிக்கு துரோகம் இழைத்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்.
ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கும் முடிவு அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்டது. இன்னும் சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இறுதியான பின்னர் தெரிவிக்கப்படும்.
தேமுதிகவுடன் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை" என்றார்.
- பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்த்து வருவது வெட்கக்கேடானது.
- அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும் கூட.
சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் 22 வயது பெண்ணை 5 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில் பணிக்கு சேர்ந்த பெண் ஒருவரை, கல்லூரி வளாகத்திலேயே வைத்து கேண்டின் மாஸ்டர் மற்றும் பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது.
தமிழ்நாட்டில் நாள்தோறும் கொடுரமான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இந்த பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்த்து வருவது வெட்கக்கேடானது.
சென்னையில் நேற்று பீகாரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அவரும் அவரது கணவரும் குழந்தையும் கொடூரமாக கொல்லப்பட்ட, இந்தியாவை பதைபதைக்க செய்த சம்பவத்தின் பதட்டமே இன்னும் ஓய்வுறாத நிலையில்,
இன்று மீண்டும் ஒரு பெண், அரசுக் கல்லூரியின் கேண்டினில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளாரே, என்பது குறித்து கேட்டால் அப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதே தெரியாது என்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள்.
அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும் கூட.
ஆயிரம் முறை நான் மீண்டும் மீண்டும் கூறிவருவதை போல திமுக ஆட்சியில் தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிப்போயுள்ளதையே இந்த தொடர் சம்பவங்கள் அழுத்தமாக நிரூபித்துள்ளது. இனியும் பொம்மை போன்று செயல்படாது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த விடியா அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2-வது முதல் 8-வது தளங்கள் வரை அலுவலக பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டு உள்ளன.
- பிராட்வே பஸ் நிலையம் மாநகரப் பஸ்களுக்கான நிலையமாக மாற்றப்பட்டு தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது.
சென்னை மாநகரின் முக்கிய இடத்தில் பிராட்வே நிலையம் அமைந்துள்ளதாலும், மக்கள் தொகை பெருக்கத்தினாலும், இட நெருக்கடியால் வெளியூர் செல்லும் பஸ்கள் 2002-ம் ஆண்டு நவம்பரில் கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்டது.
இதன் பின்னர், பிராட்வே பஸ் நிலையம் மாநகரப் பஸ்களுக்கான நிலையமாக மாற்றப்பட்டு தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது. பிராட்வே பஸ் நிலையத்தில் சிறுகடைகள் அதிகமாக உள்ளதாலும், இடநெருக்கடியாலும், இப்பஸ் நிலையத்தை நவீனப்படுத்த ஏற்கனவே பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தன.
அதன்படி, பிராட்வே பஸ் நிலையத்தில் 822 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பஸ் நிலையம் மற்றும் குறளகம் கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
இத்திட்டம் உயர் நீதிமன்றம் மெட்ரோ நிலையம், குறளகம் மற்றும் புறநகர் ரெயில் நிலையம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு மையமாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக 9 தளங்களைக் கொண்ட காம்ப்ளக்ஸ் கட்டடம் மற்றும் 10 தளங்களைக் கொண்ட குறளகம் கட்டடம் ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளது. இவை 73 பஸ் நிறுத்தங்களும், பயணிகள் கூடம், சில்லறை வணிக தளங்கள், அலுவலகப் பகுதிகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான நிறுத்துமிட வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
இந்த திட்டமானது 26,240 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள இடத்தில் மொத்தம் 1,36,580 சதுர மீட்டர் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் மூன்று முக்கிய கட்டட பிரிவுகளைக் கொண்டு உள்ளது.
இத்திட்டத்தின் மொத்த பரப்பளவு 1,08,290 சதுர மீட்டர் ஆகும். இதில் இரண்டு அடித்தளங்கள் ஒரு தரைத்தளம் மற்றும் எட்டு மேல் தளங்கள் கொண்டதாகும். பயணிகள் நேரடியாக உயர்நீதிமன்றம் மெட்ரோ நிலையம், என்.எஸ்.சி. போஸ் ரோடு, எஸ்பிளேடு ரோடு மற்றும் டி.என்.பி.எஸ்.சி. ரோடு நுழைவு மற்றும் வெளி யேற்று அமைப்பு வழியாக பஸ் நிலையம் முதல் அடித்தளத்தில் அமைந்து உள்ள பயணிகள் கூடத்தின் வழியாக தரை மற்றும் முதல் பஸ் நிலையங்களுக்கு செல்லும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வடிவமைப்பின்படி பயணிகளுக்கும் பஸ்களுக்கும் ஏற்படும் இடையூறுகள் முற்றிலுமாக தவிர்க்கப்படும். 2-வது அடித்தளம் கார் நிறுத்துமிடத்திற்காக ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதில் 2 அடுக்கு கார் நிறுத்தும் அமைப்பு உள்ளது. தரை மற்றும் முதல் தளம் பஸ் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 73 பஸ் நிறுத்தங்கள் மற்றும் பயணிகளுக்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்படும். 2-வது முதல் 8-வது தளங்கள் வரை அலுவலக பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டு உள்ளன.
22,794 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட குறளகம் கட்டடம் 2 அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் 9 மேல்தளங்களை கொண்ட கட்டடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் அடித்தளத்தில் இருந்து பயணிகளை கட்டடத்தின் பயணிகள் கூடத்திற்கும், கார் நிறுத்து மிடத்திற்கும் நேரடியாக செல்லும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், அமைச் சர்கள் கே.என். நேரு, ராஜகண்ணப்பன், .பி.கே. சேகர்பாபு, மேயர் ஆர். பிரியா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- 2026 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெறும்.
- அ.தி.மு.க. ஆட்சியில் கடன் அதிகமாகி விட்டது என தி.மு.க. கூறுவது அனைத்தும் பொய்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
* தி.மு.க.வை பற்றி மக்கள் நன்றாக தெரிந்து கொண்டார்கள். வரும் தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்.
* 2026 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெறும்.
* அ.தி.மு.க. ஆட்சியில் கடன் அதிகமாகி விட்டது என தி.மு.க. கூறுவது அனைத்தும் பொய்.
* மக்களின் வரிப்பணத்தில் பலகோடி ரூபாய் விளம்பரம் செய்யப்படுகிறது.
* உதயநிதி முதலமைச்சராக வருவது ஒருபோதும் நடக்காது.
* வரும் சட்டசபை தேர்தல் தான் தி.மு.க.விற்கு இறுதித்தேர்தல், மக்கள் சரியான தண்டனை கொடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசியலை அரசியல் ரீதியாக முதலமைச்சர் பேச வேண்டும்.
- தி.மு.க. ஆட்சியின் அவலங்கள் குறித்து நாங்கள் கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அளிக்காமல் அவதூறு பரப்புவதா?
சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
* மக்கள் பிரச்சனைகளை சட்டசபையில் எழுப்பினால் அதற்கு சரியான பதில் இல்லை.
* காலை பார்த்தால் தான் சரியான பாதையில் பயணிக்க முடியும்.
* அரசியலை அரசியல் ரீதியாக முதலமைச்சர் பேச வேண்டும்.
* தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது.
* தி.மு.க. ஆட்சியில் விலைவாசி பன்மடங்கு அதிகரித்துள்ளது. கடனாளி என்ற பட்டம் தான் மக்களுக்கு கிடைத்துள்ளது.
* தி.மு.க. ஆட்சியின் அவலங்கள் குறித்து நாங்கள் கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அளிக்காமல் அவதூறு பரப்புவதா?
இவ்வாறு அவர் கூறினார்.
மேலே பார்க்காமல் கால்களை மட்டுமே பார்த்தால் சூரியன் எப்படித் தெரியும்? என எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் விமர்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அரசு ஊழியர்களையே ஏமாற்றிய கட்சிதான் தி.மு.க.
- சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் நான்கரை ஆண்டுகளில் ஊழல் நடந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
* நான்கில் ஒரு பங்கு வாக்குறுதிகளை கூட தி.மு.க. நிறைவேற்றவில்லை.
* ஆட்சிக்கு வந்தவுடன் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை தி.மு.க. மறந்துவிடும்.
* மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தை தான் புதிய பெயரில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.
* அரசு ஊழியர்களையே ஏமாற்றிய கட்சிதான் தி.மு.க.
* 100 நாள் வேலை திட்டம் ரத்து என தவறான தகவலை பரப்பி வருகிறது தி.மு.க.
* 100 நாள் வேலை திட்டத்தில் 125 நாட்கள் வேலை என அதிகரிக்கப்பட்டுள்ளது.
* அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும்.
* எல்லா துறைகளிலும் ஊழல் நடைபெற்று கொண்டிருக்கிறது.
* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது.
* சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் நான்கரை ஆண்டுகளில் ஊழல் நடந்துள்ளது.
* அமலாக்கத்துறை கடிதம் எழுதியும் ஊழல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவில்லை.
* நகர பேருந்தில் ஆண்களும் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம்.
* அ.தி.மு.க. கொண்டு வந்த அம்மா மினி கிளீனிக் திட்டத்தை தி.மு.க. முடக்கி விட்டது.
* அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அம்மா மினி கிளீனிக் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.
* எந்தெந்த வகையில் ஊழல் செய்ய முடியுமோ, அப்படி எல்லாம் ஊழல் செய்கிறார்கள்.
* 2011-ம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையில் கூட தி.மு.க. அமர முடியவில்லை.
* 2011 முதல் 2021 வரை பல தேர்தலில் தோல்வி கண்ட கட்சி தி.மு.க.
* தி.மு.க.வின் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






