என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விஜய் சிறந்த நடிகர், ஆனால் சிறந்த அரசியல்வாதி நாங்கள் தான்- எடப்பாடி பழனிசாமி
- யாருக்காக 41 உயிர்கள் போனது? அவர் என்ன செய்திருக்க வேண்டும்.
- யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை, ஒரு அரசாங்கத்தை நடத்த அனுபவம் தேவை.
விஜய் சிறந்த நடிகர், ஆனால் சிறந்த அரசியல்வாதி நாங்கள் தான் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர்," எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்துவிட்டதாக விஜய் கூறுகிறார். யாருக்காக அவர் வந்தார்? என கரூர் துயர சம்பவத்தை சுட்டிக்காட்டி இபிஎஸ் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
இன்று 41 உயிர்களை இழந்துவிட்டோம், யாருக்காக 41 உயிர்கள் போனது? அவர் என்ன செய்திருக்க வேண்டும்
விஜய் பேச்சை கேட்பதற்காக வந்த கூட்டம்; நேரடியாக அங்கு சென்று பார்த்திருக்க வேண்டும், அதைக் கூட அவர் செய்யவில்லை
நாங்கள் நேரடியாக ஓடிச்சென்று ஆறுதல் கூறினோம்; ஆறுதல் கூட சொல்ல முடியாத விஜய் கட்சி நடத்தி என்ன பயன்?
விஜய் சிறந்த நடிகராக இருக்கலாம்; ஆனால் நாங்கள் சிறந்த அரசியல்வாதிகள்.
யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை, ஒரு அரசாங்கத்தை நடத்த அனுபவம் தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.






