என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது...  எல்லா துறைகளிலும் ஊழல் - இ.பி.எஸ். குற்றச்சாட்டு
    X

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது... எல்லா துறைகளிலும் ஊழல் - இ.பி.எஸ். குற்றச்சாட்டு

    • அரசு ஊழியர்களையே ஏமாற்றிய கட்சிதான் தி.மு.க.
    • சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் நான்கரை ஆண்டுகளில் ஊழல் நடந்துள்ளது.

    சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

    * நான்கில் ஒரு பங்கு வாக்குறுதிகளை கூட தி.மு.க. நிறைவேற்றவில்லை.

    * ஆட்சிக்கு வந்தவுடன் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை தி.மு.க. மறந்துவிடும்.

    * மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தை தான் புதிய பெயரில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

    * அரசு ஊழியர்களையே ஏமாற்றிய கட்சிதான் தி.மு.க.

    * 100 நாள் வேலை திட்டம் ரத்து என தவறான தகவலை பரப்பி வருகிறது தி.மு.க.

    * 100 நாள் வேலை திட்டத்தில் 125 நாட்கள் வேலை என அதிகரிக்கப்பட்டுள்ளது.

    * அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும்.

    * எல்லா துறைகளிலும் ஊழல் நடைபெற்று கொண்டிருக்கிறது.

    * தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது.

    * சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் நான்கரை ஆண்டுகளில் ஊழல் நடந்துள்ளது.

    * அமலாக்கத்துறை கடிதம் எழுதியும் ஊழல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவில்லை.

    * நகர பேருந்தில் ஆண்களும் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம்.

    * அ.தி.மு.க. கொண்டு வந்த அம்மா மினி கிளீனிக் திட்டத்தை தி.மு.க. முடக்கி விட்டது.

    * அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அம்மா மினி கிளீனிக் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.

    * எந்தெந்த வகையில் ஊழல் செய்ய முடியுமோ, அப்படி எல்லாம் ஊழல் செய்கிறார்கள்.

    * 2011-ம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையில் கூட தி.மு.க. அமர முடியவில்லை.

    * 2011 முதல் 2021 வரை பல தேர்தலில் தோல்வி கண்ட கட்சி தி.மு.க.

    * தி.மு.க.வின் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×