search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    1930 எண்ணில் புகார் அளிக்கலாம்
    X
    1930 எண்ணில் புகார் அளிக்கலாம்

    ஆன்லைனில் பணத்தை பறிகொடுப்பவர்கள் 1930 எண்ணில் புகார் அளிக்கலாம்- போலீஸ் கமி‌ஷனர் வேண்டுகோள்

    பொதுமக்கள் தாங்கள் நேரில் பார்க்காத, நன்றாக தெரியாத நபர்களின் பேச்சை கேட்டு பணம் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என போலீஸ் கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    சென்னை:

    சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கல் ஜிவால் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    போன் கால் மூலம் ஓ.டி.பி. பெறுவது மற்றும் ஏ.டி.எம். கார்டு விவரங்கள் கேட்பது என்ற நிலையிலிருந்து முன்னேறி மோசடி நபர்கள் தற்போது பல்வேறு உத்திகளை கையாண்டு பொதுமக்களை ஏமாற்ற துவங்கியுள்ளனர். உதாரணமாக, கேஸ் மானியம் உங்கள் அக்கவுண்டிற்கு வரும்,எனவேபேங்க் அக்கவுண்ட் நம்பர் கொடுங்கள்என்றும், போட்டித் தேர்விற்கு விண்ணப்பிக்கும் போது மொபைல் எண்ணை மாற்றி உங்கள் எண்ணை கொடுத்துவிட்டேன், உங்கள் மொபைலுக்கு ஒரு ஓ.டி.பி. வரும் அதை கொடுக்குமாறுகூறி போன் அழைப்புகள் வரும்; அந்த மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    அதேபோல் பான்கார்டு மற்றும் கே.ஒய்.சி அப்டேட் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் மொபைல் எண்பிளாக் செய்யப்படும்அல்லது வங்கி கணக்கு பிளாக் செய்யப்படும் என்று வரும் எஸ்.எம்.எஸ்.களை பொதுமக்கள் நம்ப கூடாது. அந்த எஸ்.எம்.எஸ். வரும் லிங்கை கிளிக் செய்ய கூடாது; அதிலுள்ள மொபைல் எண்ணுக்கு கால் செய்யகூடாது.

    மேலும் வேலைவாய்ப்பு இருப்பது போல் வாட்சாப்பிலோ, டெலிகிராமிலோ வரும் மெசேஜ்களை நம்பி யாருக்கும் பணம் அனுப்பகூடாது ஓ.எல்.எக்ஸ் போன்ற ஆப்-களில் பொருளை விற்கும்போது க்யூ.ஆர்.கோடு ஸ்கேன் செய்ய சொன்னால் அதனைதவிர்த்து விடவேண்டும். லோன் ஆப் மூலம் கடன் வாங்க வேண்டாம்.

    பொதுமக்கள் முகம் தெரியாத நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம்.வாட்சப் குரூப்பிலோ, டெலிகிராமிலோ தொடர்பு கொண்டு பணம் சம்பாதிக்கலாம் என்று கூறுபவர்களின் பேச்சை நம்பி பணம் அனுப்பவோ கிரிப்டோகரன்சியாக மாற்றி அனுப்பவோ கூடாது. பொதுமக்கள் தாங்கள் நேரில் பார்க்காத, நன்றாக தெரியாத நபர்களின் பேச்சை கேட்டு பணம் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் எவரேனும் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டு இருந்தால் 1930 என்ற எண்ணக்கு போன் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
    Next Story
    ×