search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கூடங்குளம் அணுமின் நிலையம்
    X
    கூடங்குளம் அணுமின் நிலையம்

    கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

    கூடங்குளம் முதல் அணு உலையில் இருந்து மட்டும் மின் உற்பத்தி செய்யப்பட்டு 565 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. மேலும் அங்கு 3, 4-வது அணு உலைகள் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. 5, 6-வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளது.

    முதல் 2 அணு உலைகளில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு, அதில் இருந்து தமிழகத்திற்கு 1,000 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் இன்று காலை 7 மணிக்கு பராமரிப்பு பணிக்காக 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. முதல் அணு உலையில் இருந்து மட்டும் மின் உற்பத்தி செய்யப்பட்டு 565 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது.

    2-வது அணு உலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, எரிபொருட்களும் மாற்றப்படுகிறது. இதற்கு சுமார் 55 நாட்கள் ஆகும் என்று அணுமின் நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். எனவே அதன்பிறகே 2-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×