search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தப்பி ஓடிய கஜேந்திரன்.
    X
    தப்பி ஓடிய கஜேந்திரன்.

    கொரோனா சிகிச்சைக்காக அனுமதி- கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கைதி தப்பி ஓட்டம்

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கைதி தப்பி சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை டவுன்ஹால், ரெயில் நிலையம் மற்றும் நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள கோவில்களில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரே நாள் இரவில் சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டு இருந்தது.

    போலீசார் நடத்திய விசாரணையில் கோவில்களில் சிலையை சேதப்படுத்தியது சேலத்தைச் சேர்ந்த கஜேந்திரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து கஜேந்திரன் மீது இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்த முயற்சி உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் கஜேந்திரன் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஒன்றரை ஆண்டுகளாக ஜெயிலில் தண்டனை அனுபவித்த அவருக்கு கடந்த 27-ந் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

    இதையடுத்து கஜேந்திரன் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கைதிகளுக்கான வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் நேற்று இரவு கஜேந்திரன் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிச் சென்றார். அங்கு காவலில் இருந்த போலீசார் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    கஜேந்திரன் தப்பிச் சென்றது குறித்து போலீசார் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கஜேந்திரனை போலீசார் தேடி வருகிறார்கள்.



    Next Story
    ×