search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி
    X
    சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி

    முதல் நாள் நாடு முழுவதும் 40 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி - மத்திய அரசு தகவல்

    தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் இது ஒரு மைல் கல் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மனுசுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி :

    இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், ஒமைக்ரான் அச்சறுத்தலை சமாளிக்கும் வகையிலும் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் 3ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

    அதன்படி இன்று சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் தொடங்கியது.  சிறார்களுக்கு கோவோக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கு மட்டுமே மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

    முதல் நாளான இன்று 40 லட்சத்திற்கும் அதிகமான சிறார்களுக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

    தமது ட்விட்டர் பக்கத்தில் மத்திய மந்திரி  மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள பதிவில், இரவு 8 மணிவரை 40 லட்சத்திற்கும் அதிகமான சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் இது ஒரு மைல்கல். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×