search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் சீனிவாசன்
    X
    திண்டுக்கல் சீனிவாசன்

    தேவர் ஜெயந்தி விழா: எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். பங்கேற்காதது ஏன்?- திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்

    சசிகலா குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, எல்லோரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது தான் அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பம் என கூறினார்.
    மதுரை:

    கமுதி அருகே பசும்பொன்னில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் இன்று முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறுகையில், முத்துராமலிங்கத் தேவர் மீது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார். எனவே தான் அ.தி.மு.க. சார்பில் அவரது உருவச்சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி இறந்த காரணத்தால் இந்த ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவுக்கு அவரால் பங்கேற்க முடியவில்லை.

    இதே போல் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட காரணத்தால் பசும்பொன்னுக்கு வர முடியவில்லை. இருப்பினும் இருவரும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் என்றார்.

    அப்போது சசிகலா குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, எல்லோரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது தான் அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பம் என கூறினார்.
    Next Story
    ×