search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.எஸ்.அழகிரி
    X
    கே.எஸ்.அழகிரி

    மத நல்லிணக்கத்துக்கு எதிரானோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்- கே.எஸ்.அழகிரி

    மதநல்லிணக்கத்திற்கு உலை வைக்கின்ற வகையில் கருத்துகளை வெளியிடுகிற சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    யோகக் குடில் சிவயோகி சிவகுமார் என்ற நபர் இஸ்லாமியர்களைப் பற்றியும், அவர்களால் வணங்கப்படுகிற இறை தூதர் முகமது நபி பற்றியும், அவர்களின் தொழுகை முறைகளைப் பற்றியும் அநாகரீகமாக விமர்சித்துப் பேசி, அதை வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்.

    இதுகுறித்து சிவகுமார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

    இந்த நடவடிக்கையை மேற்கொண்ட காவல்துறையினரை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம். மதநல்லிணக்கத்திற்கு உலை வைக்கின்ற வகையில் கருத்துகளை வெளியிடுகிற சிவகுமார் போன்ற சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×