என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
385 ஆசிரியர்களுக்கு டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது - தமிழக அரசு
Byமாலை மலர்5 Aug 2021 10:31 AM GMT (Updated: 5 Aug 2021 10:31 AM GMT)
டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை:
டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது" வழங்கி தமிழ்நாடு அரசு கௌரவித்து வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு சிறந்த முறையில் பணியாற்றிய ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் 385 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா பேரிடர் காலத்தில் கற்பித்தல் பணி மேற்கொள்ளாத ஆசிரியர்கள் விருது பெற தகுதியானவர்கள் இல்லை. 5 ஆண்டு கல்வி பணியில் எவ்வித புகாருக்கும் இடம் தராமல் ஈடுபட்டுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
×