search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DR. RADHAKRISHNAN AWARD"

    • 11 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
    • தமிழக அரசு சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படும்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:

    எண்ணை ஆதிதிராவிடர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன், காவேரி நகர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வின்சென்ட், தாஞ்சூர் அரசு மேல்நிலை பள்ளியின் முதுகலை ஆசிரியர் ராஜகோபால், சூரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் புகாரி, ஆவணத்தாங்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பாஸ்கரன், மணமேல்குடி ஒன்றியம் மேலஸ்தானம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வாசுகி, அரிமளம் ஒன்றியம் பூனையன் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சாத்தப்பன், மேற்பனைக்காடு கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் சதீஷ்குமார், அன்னசத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பவானி, வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடன ஆசிரியர் குமார், ஓரியண்டல் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முத்துராமலிங்கம் ஆகிய 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    ×