search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் விசாரணை
    X
    போலீசார் விசாரணை

    சிறுவனிடம் ரூ.500 கள்ள நோட்டு கொடுத்த வாலிபர் யார்?- போலீசார் தீவிர விசாரணை

    நெல்லையில் சிறுவனிடம் ரூ.500 கள்ளநோட்டை கொடுத்தது யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லை:

    நெல்லை கே.டி.சி. நகரில் உள்ள ஒரு வீட்டில் மேள கலைஞர்கள் தங்கி உள்ளனர். இங்கு திருச்சியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனும் தங்கி இருந்து, மேளம் அடிக்கும் தொழில் செய்து வந்தார்.

    நேற்று அந்த சிறுவன் கே.டி.சி.நகர் பஜாரில் நிற்கும் போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் சிறுவனிடம் ரூ.500-ஐ கொடுத்து உணவு வாங்கி சாப்பிடும் படி கூறிவிட்டு சென்று விட்டார்.

    அந்த சிறுவனும் மகிழ்ச்சியுடன் கடைக்கு சென்று சிக்கன் புரோட்டா வாங்கினார். அதற்குரிய பணமாக, வாலிபர் கொடுத்த ரூ.500-ஐ கொடுத்தார். அதை வாங்கிய கடைக்காரர், அது ஜெராக்ஸ் எடுத்த கள்ள நோட்டு என்று தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.

    உடனடியாக அவர் பாளை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து 500 ரூபாய் கள்ள நோட்டை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அந்த சிறுவனை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுவன், தன்னிடம் கள்ள நோட்டை கொடுத்தது யார் என்று தெரியாது என்றும், பைக்கில் வந்த வாலிபர் கொடுத்து சாப்பிடும்படி கூறிவிட்டு சென்றார் என்றும் கூறினார். போலீசார் அந்த சிறுவனிடம் எழுதி வாங்கிக்கொண்டு எச்சரித்து அனுப்பினர்.

    மேலும் அந்த சிறுவனிடம் ரூ.500 கள்ளநோட்டை கொடுத்தது யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இது போல வேறு எங்கும் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட கள்ளநோட்டு கொடுக்கப்பட்டு உள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×