search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்து, ஒரு சவரன் ரூ.35,504-க்கு விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 21-ந் தேதி பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. மறு நாளில் இருந்து விலை குறைந்தபடியே இருந்து வருகிறது.

    நேற்று பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.35 ஆயிரத்து 720-க்கு விற்றது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்தது.

    சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.216 குறைந்து ரூ.35 ஆயிரத்து 504-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.27 குறைந்து ரூ.4 ஆயிரத்து 438 ஆக உள்ளது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந் தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.73 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.50-க்கு விற்கிறது.

    தங்கம் விலை 6 நாட்களில் பவுனுக்கு ரூ.552 குறைந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை குறைந்து வந்தது. இதனால் தங்கம் பவுன் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

    இதற்கிடையே சமீபத்தில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டதால் தொழில்கள் முடங்கியது. இதையடுத்து தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்ததால் விலை உயர்ந்து வந்தது.

    இதற்கிடையே தற்போதுதொடர்ந்து விலை குறைந்து வருவது ஏழை நடுத்தர மக்களுக்கு ஆறுதலாக உள்ளது.

    Next Story
    ×