search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெடிகுண்டு வீச்சு
    X
    வெடிகுண்டு வீச்சு

    சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் மீது வெடிகுண்டு வீச்சு: கஞ்சா கும்பல் தப்பி ஓட்டம்

    சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர்கள் மீது கஞ்சா கும்பல் வெடிகுண்டுகளை வீசி தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கும்மிடிப்பூண்டி:

    மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுதாகர். இவர் இன்று அதிகாலை ஒரு குற்ற வழக்கில் தொடர்புடைய வாலிபரை பிடிப்பதற்காக ஆந்திர மாநிலம் தடா பகுதிக்கு தனிப்படையினருடன் சென்றார்.

    அவர்கள் அதிகாலை 5 மணியளவில் தடாவில் உள்ள ஒரு வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மர்ம கும்பல் போலீசாரை நோக்கி நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    இந்த தாக்குதலில் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர், மற்றொரு போலீஸ்காரர் வேல்முத்து மற்றும் அதே பகுதியை சேர்ந்த முனுசாமி ஆகியோர் காயம் அடைந்தனர்.

    இதனைப் பயன்படுத்தி வீட்டில் பதுங்கியிருந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. அந்த வீட்டில் ஏராளமான கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. மர்ம கும்பல் கஞ்சாவை பொட்டலமாக பிரித்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு அனுப்பி வந்தது தெரிந்தது.

    தேடப்பட்ட குற்றவாளி அந்த கஞ்சா கும்பலுடன் சேர்ந்து போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தப்பியிருப்பது தெரிய வந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து போலீசார் அங்கிருந்து திரும்பி வந்தனர். பலத்த காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர், போலீஸ்காரர் வேல்முத்து ஆகியோர் மதுரவாயலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    போலீசார் விசாரணை

    அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை பற்றிய விவரங்களை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர். தப்பி ஓடிய கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலீஸ்காரர்கள் மீது கஞ்சா கும்பல் வெடிகுண்டுகளை வீசி தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×