search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு சவரன் ரூ.35 ஆயிரத்து 600-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.4 ஆயிரத்து 450-ஆக இருந்தது.

    சென்னை:

    தங்கம் விலை சில நாட்களாக உயர்ந்த வண்ணம் இருந்தது. இதனால் தங்கம் விலை பவுனுக்கு மீண்டும் ரூ.35 ஆயிரத்தை சமீபத்தில் தாண்டியது. அதன்பின் விலை உயர்ந்தபடியே இருந்தது.

    நேற்று பவுனுக்கு ரூ.344 உயர்ந்து ரூ.35 ஆயிரத்து 960-க்கு விற்றது. விலை தொடர்ந்து உயர்ந்ததால் தங்கம் பவுன் மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று தங்கம் விலை குறைந்தது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.35 ஆயிரத்து 600-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.4 ஆயிரத்து 450-ஆக இருந்தது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.600 குறைந்து ரூ.73 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரு.73.60-க்கு விற்கிறது.

    கடந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலையில் குறைவு காணப்பட்டது. பவுன் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. பின்னர் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் தங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் அதிகளவு முதலீடு செய்ததால் விலை உயர்ந்தது. இதனால் பவுன் மீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×