search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35,752-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து குறைந்து வந்தது. கடந்த 1-ந் தேதியில் இருந்து 5 நாட்களாக விலை குறைந்தபடியே இருந்ததால் தங்கம் பவுன் ரூ. 36 ஆயிரத்துக்குள் வந்தது.

    நேற்று பவுனுக்கு ரூ. 224 குறைந்து ரூ. 35 ஆயிரத்து 640-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ. 4 ஆயிரத்து 455 ஆக இருந்தது. இந்த நிலையில் 5 நாட்களுக்கு பிறகு இன்று தங்கம் விலை உயர்ந்தது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ. 112 அதிகரித்து ரூ. 35 ஆயிரத்து 752 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ. 14 உயர்ந்து ரூ. 4 ஆயிரத்து 469 ஆக உள்ளது.

    அதேபோல தொடர்ந்து குறைந்து வந்த வெள்ளி விலையும் இன்று உயர்ந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ. 800 அதிகரித்து ரூ. 73 ஆயிரத்து 400 ஆகவும், ஒரு கிராம் ரூ. 73.40 ஆகவும் உள்ளது.
    Next Story
    ×