search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலையில் மேலும் சரிவு: சவரன் ரூ.36,328-க்கு விற்பனை

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து ஒரு சவரன் ரூ.36,328-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலையில் சில நாட்களாகவே ஏற்றத்தாழ்வு காணப்பட்டு வந்தது.

    பவுன் ரூ.37 ஆயிரத்துக்குள்ளே இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.36 ஆயிரத்து 520-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 565 ஆக இருந்தது.

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை சரிந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.192 குறைந்து ரூ.36 ஆயிரத்து 328-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.24 குறைந்து ரூ.4 ஆயிரத்து 541 ஆக உள்ளது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1700 சரிந்து ரூ.73 ஆயிரத்து 600 ஆக இருக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்துக்கான சுங்கவரி குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி சுங்கவரி 12.5 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக குறைந்துள்ளது.

    இதனால் தங்கம் விலை இன்று 2-வது நாளாக குறைந்துள்ளது. நேற்றும், இன்றும் சேர்ந்து பவுனுக்கு ரூ.672 குறைந்துள்ளது.
    Next Story
    ×