search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.37 ஆயிரத்து 256-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.4,657 ஆக உள்ளது.
    சென்னை:

    தங்கம் விலை கடந்த வாரம் குறைந்து வந்த நிலையில் தற்போது சில நாட்களாக விலையில் ஏற்றத்தாழ்வு காணப்பட்டது. இதனால் பவுன் மீண்டும் ரூ. 37 ஆயிரத்தை தாண்டியது. நேற்று தங்கம் பவுன் ரூ. 37 ஆயிரத்து 56-க்கு விற்றது.

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலையில் உயர்வு காணப்பட்டது. சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 37 ஆயிரத்து 256-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ. 25 அதிகரித்து ரூ. 4,657 ஆக உள்ளது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ. 600 அதிகரித்து ரூ. 67 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 67.40-க்கு விற்கிறது.
    Next Story
    ×