search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினிகாந்த் - ஓ பன்னீசெல்வம்
    X
    ரஜினிகாந்த் - ஓ பன்னீசெல்வம்

    ’அன்புச்சகோதரர் ரஜினிகாந்திற்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ - துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டுவீட்

    நாளை 70-வது பிறந்தநாளை கொண்டாட உள்ள திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமா துறையின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் 1950-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதியில் பிறந்தார். 

    சினிமா துறை மட்டுமல்லாமல் தற்போது ரஜினிகாந்த் அரசியலிலும் குதித்துள்ளார். அவர் தான் தொடங்கவுள்ள அரசியல் கட்சி குறித்டு விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் நாளை (2020 டிசம்பர் 12) தனது 70-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதையடுத்து, ரசிகர்களும், அரசியல் உள்பட பல்வேறு துறையினரும் நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நாளை 70-வது வயதில் அடியெடுத்துவைக்க உள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இது தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ’தனது அயராத உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனிமுத்திரை பதித்து #Superstar ஆக கோலோச்சி வரும் அன்புச்சகோதரர் 
    ரஜினிகாந்த் மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ எனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×