என் மலர்
செய்திகள்
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் இன்று கோவை வருகை
கோவை:
அகில இந்திய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் இன்று விமானம் மூலம் கோவை வருகிறார். பின்னர் காரில் கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஆரிய சித்த வைத்திய சாலைக்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் இருக்கும் மோகன் பகவத் அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நேராக வடவள்ளி அருகே உள்ள சின்மயா ஆசிரமத்திற்கு செல்கிறார்.
அங்கு வருகிற 29-ந் தேதி வரை தங்கும் அவரை பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுகின்றனர். அந்த சந்திப்பில் பல்வேறு தரப்பு விஷயங்கள் குறித்து பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோகன் பகவத்தின் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. இதுதவிர போலீசார் அனைத்து இடங்களிலும் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணியில் 1000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.