search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,440-க்கு விற்பனை ஆகிறது.
    சென்னை:

    தங்கம் விலையில் சில நாட்களாகவே ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. கடந்த 29-ந் தேதி பவுன் ரூ.38 ஆயிரத்தை மீண்டும் தாண்டியது. அதன்பிறகு விலையில் குறைந்தும், அதிகரித்தபடியே இருந்து வருகிறது.

    நேற்று தங்கம் பவுனுக்கு ரூ.312 உயர்ந்து, ரூ.38,880-க்கு விற்றது. இதனால் தங்கம் விலை மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று தங்கம் விலையில் குறைவு காணப்பட்டது. சென்னையில் இன்று காலை பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.38,440-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.4,805 ஆக இருக்கிறது.

    தங்கத்தை போலவே இன்று வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.2,400 குறைந்து ரூ.62,900-க்கு விற்கிறது. ஒரு கிராம் வெள்ளி 62.90 ஆக உள்ளது.

    Next Story
    ×