search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கோவையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை

    கோவையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரம் வெங்கடசாமி சாலை கிழக்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவரது மகள் 19 வயது சுபஸ்ரீ, நாமக்கல் மாவட்டத்தில் சிபிஎஸ்இ பாடப்பிரிவில் 12 ம் வகுப்பு முடித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக தயாராகி வந்தார்

    கடந்தாண்டு நீட் தேர்வில் 451 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தார். பல் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தும், பொது மருத்துவப் பிரிவில் சேர வேண்டும் என்பதற்காக கோவையில் உள்ள தனியார் அகாடமியில் பயின்று வந்தார்.

    கொரோனா ஊரடங்கினால் ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. இதனால் சுபஸ்ரீ மன உளைச்சலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சுபஸ்ரீயின் தாயார் சுமதி அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    Next Story
    ×