search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    முதலமைச்சர் நாளை கள்ளக்குறிச்சி பயணம்- கொரோனா தடுப்பு, வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு

    கொரோனா தடுப்புப் பணி ஆய்வுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கள்ளக்குறிச்சிக்கு செல்கிறார்.
    கள்ளக்குறிச்சி:

    மதுரை, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, சேலம் ஆகிய மாவட்டங்களில் நேரடியாக சென்று, முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து நாளை மதியம் 3 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

    அப்போது, மாவட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழுக்கள், தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்தும் முதலமைச்சர், நாளை இரவு கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை திரும்புகிறார்.
    Next Story
    ×