search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவ ராவ்
    X
    ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவ ராவ்

    கொரோனா வார்டுகளில் நோயாளிகளிடம் செல்போனில் குறைகேட்கும் கலெக்டர்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் கொரோனா நோயாளிகளிடம் செல்போனில் நாள்தோறும் குறைகளை கேட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிறப்பு மையத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பல்வேறு குறைகள், கோரிக்கைகள் நாள்தோறும் இருந்து வருகிறது. இந்த குறைகள் பல தீர்க்கப்பட்டாலும் நோயாளிகள் தரப்பில் சில குறைகள் தீர்க்கப்படாததாகவே உள்ளதாக கருதப்படுகிறது.

    இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் கொரோனா நோயாளிகளிடம் செல்போனில் நாள்தோறும் குறைகளை கேட்டு அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக கொரோனா நோயாளிகள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படும்போது அவர்களின் செல்போன் எண் பெறப்பட்டு அந்த பட்டியலின் அடிப்படையில் நாள்தோறும் கலெக்டர் வீரராகவ ராவ் 5 நோயாளிகளிடம் செல்போனில் பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

    இவ்வாறு கலெக்டர் செல்போனில் பேசி குறைகளை கேட்கும்போது முதலில் தயங்கினாலும் பின்னர் தங்களின் குறைகளை கூறும் நோயாளிகள் தரும் தகவல்களின் அடிப்படையில் அவற்றை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×