search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூரிய கிரகணம்
    X
    சூரிய கிரகணம்

    சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது- விஞ்ஞானிகள் தகவல்

    நாளை நடைபெறும் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. பார்த்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
    கொடைக்கானல்:

    வளைய சூரிய கிரகணம் எனப்படும் சூரிய கிரகணம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதுகுறித்து கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் உள்ள வானியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் எபினேசர் மற்றும் குமரவேல் ஆகியோர் கூறியதாவது:-

    நாளை நடைபெற உள்ள சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம். முழு சூரிய கிரகணம் இல்லை. இந்த சூரிய கிரகணம் தமிழகத்தில் நாளை காலை 10.22 மணிக்கு தொடங்கி மதியம் 1.41 மணிக்கு முடிவு பெறும். இதில் நண்பகல் 11.59 மணிக்கு முழுமையான நிலை ஏற்படும். இருப்பினும் தமிழகத்தில் 34 சதவீதம் மட்டுமே சூரிய கிரகண நிகழ்வை காண முடியும். கொடைக்கானல் பகுதியில் நடைபெறும் சூரிய கிரகணத்தை   www.iiap.res.in   என்ற இணையதளங்களில் பொதுமக்கள் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்கள் மேற்கண்ட இணையதளத்திற்கு சென்று சூரிய கிரகண நிகழ்வை பார்க்கலாம். சூரிய கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்க கூடாது. பார்த்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே பாதுகாப்பான கண்ணாடிகளை அணிந்தபடியே அதனை பார்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×