என் மலர்

  செய்திகள்

  திருச்சி மாவட்டம்
  X
  திருச்சி மாவட்டம்

  கட்டுக்குள் வந்தது கொரோனா- ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறுகிறது திருச்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சியில் கொரானா வைரஸ் பரவுவது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து திருச்சி மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாற வாய்ப்புள்ளது.
  திருச்சி:

  திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிக்கப்பட்ட 150 பேரில் பலர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களும் இன்னும் 2 நாளில் வீடு திரும்ப உள்ளனர். அதிகம் பேர் பாதிக்கப்பட்டதால் திருச்சி ஹாட் ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டதுடன் சிவப்பு மண்டலத்திலும் இடம் பெற்றிருந்தது. தற்போது மாவட்டத்தில் வைரஸ் பரவுவது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது .

  கடந்த ஒரு வாரமாக யாருக்கும் புதிதாக வைரஸ் தொற்று பாதிக்கவில்லை. இதனால் திருச்சி மாவட்டம் கொரானா வைரஸ் பரவலில் இருந்து விலகி உள்ளது. இதையடுத்து சிவப்பு மண்டலத்திலுள்ள திருச்சி ஆரஞ்சு மண்டலத்திற்கு மாற வாய்ப்புள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

  Next Story
  ×