என் மலர்

  செய்திகள்

  கோயம்பேடு மார்க்கெட்
  X
  கோயம்பேடு மார்க்கெட்

  கோயம்பேடு மார்க்கெட்டில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை கோயம்பேட்டில் உள்ள மார்க்கெட்டில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
  சென்னை:

  சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று 3 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து, மார்க்கெட்டை இரண்டாகப் பிரித்து சமூக இடைவெளியை உறுதி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் காவல்துறை மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 

  இந்த பேச்சுவார்த்தையில் மொத்த வியாபார கடைகளை மட்டும் கோயம்பேடு சந்தையில் செயல்படவும், சிறு வியாபாரிகளுக்கு வேறு இடங்களில் வியாபாரம் செய்யவும் சிஎம்டிஏ அனுமதி அளித்தது. 

  இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுப்பதற்காக, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×