என் மலர்

  செய்திகள்

  கைதான தாய் - கள்ளக்காதலன்
  X
  கைதான தாய் - கள்ளக்காதலன்

  கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனை கொன்றது ஏன்? கைதான தாய் பரபரப்பு வாக்குமூலம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க தடையாக இருந்த மகனை அடித்தும், சூடு வைத்தும் கொடுமைப்படுத்தி கொன்றதாக கைதான தாய் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.
  கோவை:

  கோவை கோவில்மேடு பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்தவர் திவ்யா (வயது 30). இவர் தன்னுடைய 6 வயது மகன் அபிஷேக்கை கள்ளக்காதலன் ராஜதுரை (32) என்பவருடன் சேர்ந்து அடித்தும், சூடு வைத்தும் கொடுமைப்படுத்தி கொலை செய்தார். இது தொடர்பாக சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் தாய் திவ்யா, கள்ளக்காதலன் ராஜதுரை ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கைது செய்யப்பட்ட சிறுவனின் தாய் திவ்யா போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

  கருத்து வேறுபாடு காரணமாக எனது கணவரை பிரிந்த நான் 2 குழந்தைகளுடன் கடந்த 6 மாதத்துக்கு முன்பு துடியலூர் பகுதிக்கு குடி வந்தேன். அப்போது எனக்கும் ராஜதுரைக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து நாங்கள் இருவரும் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தோம்.

  தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே அடிக்கடி உல்லாசமாக இருப்போம். அதற்கு எனது குழந்தைகள் இடையூறாக இருந்ததால். நாங்கள் 2 பேரும் சேர்ந்து அவர்களை பூரி கட்டையால் தாக்கினோம். மேலும் கத்தியை நெருப்பில் பழுக்க வைத்து உடலில் சூடு போட்டுள்ளோம். குழந்தைகள் அழுவதை வீட்டின் உரிமையாளர் தட்டிக் கேட்டார். தொடர்ந்து நாங்கள் குழந்தைகளை தாக்கியதால் அவர்கள் எங்களை வீட்டைவிட்டு அனுப்பிவிட்டனர்.

  இந்தநிலையில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு நாங்கள் சாய்பாபா காலனி பகுதிக்கு குடி வந்தோம். அங்கும் தொடர்ந்து அடிக்கடி நாங்கள் உல்லாசமாக இருந்தோம். அதற்கு குழந்தைகள் இடையூறாக இருந்தனர். குறிப்பாக எனது மகன் அபிஷேக் எங்களுக்கு பெரும் இடையூறாக இருந்தான். இதனால் நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து அவனைத் தாக்கினோம். உடலில் சூடு வைத்தோம். இதனால் அவன் வலியால் துடித்தான்.

  ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றால் மாட்டிக் கொள்வோம் என்று மருந்து கடையில் மருந்து வாங்கி கொடுத்தோம். அப்போது அபிஷேக் மயங்கிவிட்டான். இதனால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தோம். அவர்கள் வந்து விசாரித்தபோது, மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக தெரிவித்தோம். அப்போது அபிஷேக்கை பரிசோதனை செய்த அவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மேலும் இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் நாங்கள் சிக்கிக் கொண்டோம்.

  இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

  கள்ளக்காதலன் ராஜதுரை போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், “நான் திவ்யாவின் கணவர் என அக்கம்பக்கத்தில் கூறியிருந்தேன். ஆனால் அபிஷேக் என்னை அப்பா என அழைக்க மறுத்து விட்டான். “நீ என் அப்பா இல்லை”, “எங்கள் வீட்டில் இருக்காதே வெளியே போ” என அடிக்கடி கூறினான். மேலும், எங்களை தனிமையில் இருக்க விடாமல் தொந்தரவு செய்தான். இதனால் கோபத்தில் இருந்த நாங்கள் அவனை அடித்தபோது மயங்கி விழுந்து இறந்துவிட்டான்” என கூறியுள்ளார்.

  சிறுவன் அபிஷேக்குக்கு வலி மாத்திரை கொடுத்தார்களா? அல்லது தூக்க மாத்திரை கொடுத்தார்களா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திவ்யாவின் 3 வயது பெண் குழந்தை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. திவ்யாவும், கள்ளக்காதலன் ராஜதுரையும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
  Next Story
  ×