search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானதி சீனிவாசன்
    X
    வானதி சீனிவாசன்

    ரேசன் பொருள் வாங்க முடியாமல் தவிக்கும் தொழிலாளர்கள்- நடவடிக்கை எடுக்க வானதி சீனிவாசன் கோரிக்கை

    திருப்பூரில் ரேசன் பொருள் வாங்க முடியாமல் வெளி மாவட்ட தொழிலாளர்கள் தவித்து வருவதால் நடவடிக்கை எடுக்க கோரி மாநில பா.ஜனதா பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    சென்னை:

    திருப்பூரில் பனியன் தொழிற்சாலைகளில் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். தற்போது தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் வேலையின்றி தவிக்கிறார்கள். வெளி மாவட்டங்களை சேர்ந்த இவர்களுக்கு ரேசன் கார்டுகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ளது. இப்போது அரசு ரூ.1000 நிவாரண உதவி மற்றும் இலவச பொருட்கள் வழங்குகிறது.

    ஆனால் இந்த தொழிலாளர்கள் தங்கள் ரேசன் கார்டுகள் மூலம் திருப்பூரில் பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். இந்த மாதிரி சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக மாநில பா.ஜனதா பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் அந்த மாவட்ட கலெக்டர் விஜயசந்திரனிடம் தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து அவர்களை கணக்கெடுத்து அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்வதாக கலெக்டர் உறுதி அளித்துள்ளார்.

    Next Story
    ×