search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஊரடங்கு உத்தரவு அமல் - நாமக்கல் மாவட்டத்தில் ரோட்டில் சுற்றித் திரிந்த 54 பேர் கைது

    தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் ரோட்டில் சுற்றித் திரிந்த 54 பேர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளார்.
    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் நல்லிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவள்ளுவர் நகரில் அவசியம் இல்லாமல் அமர்ந்திருந்த 6 நபர்கள் மீதும், மோகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மோகனூர் தெற்கு தெருவில் உள்ள பகவதியம்மன் கோவில் அருகில் அமர்ந்திருந்த 5 நபர்கள் மீதும், ராசிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராசிபுரம் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் சுற்றித்திரிந்த ஒருவர் மீதும், திருச்செங்கோடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செங்கோடு- வேலூர் சாலையில் சுற்றித் திரிந்த 6 பேர் மீதும், திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செங்கோடு- வேலூர் சாலையில் சித்தாளந்தூர் சோழசிராமணி பிரிவு அருகே சுற்றித் திரிந்த 5 பேர் மீதும், பள்ளிப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிபாளையம் 4 ரோட்டில் சுற்றித் திரிந்த 6 நபர்கள் மீதும், குமாரபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிப்பாளையம் பிரிவு சாலை மற்றும் ஆனங்கூர் பிரிவு சாலைகளில் கூடியிருந்த 10 பேர் மீதும், எலச்சிப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொன்னையாறு செல்லியம்மன் கோவில் அருகில் அமர்ந்திருந்த 5 பேர் மீதும், பரமத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த 5 பேர் மீதும், வேலகவுண்டம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேலகவுண்டம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கூடியிருந்த 5 நபர்கள் மீதும் அந்தந்த காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

    விடுமுறையிலிருக்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் தேவை இல்லாமல் சுற்றித்திரிந்தாலோ அல்லது கூட்டமாக கூடியிருந்தாலோ அல்லது விளையாடினாலோ அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனைவரும் தங்களது வீட்டிற்குள்ளேயே இருந்து தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பினை வழங்கியும், தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளுமாறு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கேட்டுக்கொண்டுள்ளார்.
    Next Story
    ×