search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    துபாயில் தவிக்கும் தமிழக மீனவர்களை அழைத்து வரவேண்டும்: மத்திய-மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல்

    துபாயில் இருந்து நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழக மீனவர்கள் 13 பேரை மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடல் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 9 பேர், தஞ்சை மாவட்ட மீனவர்கள் 3 பேர், புதுச்சேரி மீனவர் ஒருவர் என 13 மீனவர்கள் மீன்பிடி ஒப்பந்த தொழிலாளர்களாக துபாய் நாட்டிற்கு மீன்பிடிக்கச் சென்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மீன்பிடி தொழிலுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

    இந்த நிலையில் துபாயில் மீன்பிடி ஒப்பந்தக் கூலியாக சென்ற 13 தமிழக மீனவர்களும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிப்பதாக வாட்ஸ்-அப் வழியாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்திய பணம் ஒரு லட்சத்திற்கு இணையாக திரகம் செலுத்தினால் மட்டுமே ஊருக்குப் போக முடியும் என தெரிவித்து படகு உரிமையாளர் பாஸ்போர்ட்டை கொடுக்க மறுத்துள்ளார்.

    இது குறித்து கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி, துபாயில் இருந்து 13 மீனவர்களையும் மீட்க மத்திய-மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×