search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள ஊது புகையிலை
    X
    பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள ஊது புகையிலை

    கோவை ரெயிலில் ஊதுபுகையிலை கடத்தல்- 4 அசாம் வாலிபர்கள் கைது

    கோவை ரெயிலில் ரூ.2 கோடி மதிப்புள்ள ஊதுபுகையிலையை பறிமுதல் செய்த போலீசார் 4 அசாம் வாலிபர்களை கைது செய்தனர்.
    கோவை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒலவக்கோடு ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு இன்ஸ்பெக்டர் கிரிஷ்குமார் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கோவையில் இருந்து வந்த ரெயிலில் பயணிகள் இறங்கினர். அதில் சுற்றுலா பேக்குடன் 4 வாலிபர்கள் சந்தேகப்படும்படி இறங்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

    இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 40 கிலோ ஊதுபுகையிலை இருந்தது. இந்த வகை புகையிலை 1 கிலோ ரூ.5 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகை புகையிலையை விற்பனை செய்ய முன் அனுமதி பெற வேண்டும். இது தவிர இதற்கு ஜி.எஸ்.டி. உண்டு.

    விசாரணையில் ஊது புகையிலையை கடத்தி வந்தவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரகுல் இஸ்லம் (வயது 29), அகமது அசீர் (28), அமீர் (31), முகமது நபில் (31) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    ஊதுபுகையிலையை பறிமுதல் செய்த போலீசார் கூறும்போது, பழைய சினிமாவில் ராஜாக்கள் பைப் வழியே புகையை இழுத்து ஊதும் புகையிலையைத்தான் ஊது புகையிலை என்பார்கள்.

    தற்போது சில செல்வந்தவர்கள் பைப் வழியே இந்த ஊதுபுகையிலையை பயன்படுத்தி வருகிறார்கள் என்றனர். ஊது புகையிலையை கடத்திய 4 பேரையும் போலீசார் கைது செய்து வரி ஏய்வு செய்ததாக ஜி.எஸ்.டி. அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×