search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகையிலை கடத்தல்"

    • புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக மினிலாரியில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
    • விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரிசல்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசார் சாலையோரத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த மினி லாரியை சோதனை செய்தனர்.

    அப்போது வாகனத்தின் வெளிப்புற நீளத்தை விட உட்புறத்தின் நீளம் சற்று குறைவாக இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார் வாகனத்தின் உள்ளே சென்று பார்த்ததில் வாகனத்தின் உட்புறம் ரகசிய அறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதனுள் இறங்கி சோதனையிட்டதில், விளாத்திகுளத்தை சேர்ந்த ஜெயராஜ் (வயது 47) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக மினிலாரியில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து உடனடியாக தனிப்படை போலீசார் ஜெயராஜை கைது செய்து அவரிடமிருந்த புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் மினிலாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட ஜெயராஜ் மீது ஏற்கனவே விளாத்தி குளம் போலீஸ் நிலையத்தில் மட்டும் புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் என 10 வழக்குகளும், எட்டையபுரம் போலீஸ் நிலையத்தில் 1 வழக்கும், புதூர் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், பசுவந்தனை போலீஸ் நிலையத்தில் 1 வழக்கும், மதுரை மாவட்டம் அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் 1 வழக்கும், அண்ணாநகர் காவல் போலீஸ் நிலையத்தில் 1 வழக்கும், விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் 1 வழக்கும், சாத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் 1 வழக்கும், சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் 1 வழக்கும் என 19 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பல முறை கைது செய்த பின்னரும் ஜெயராஜ், பெங்களூர் போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகளவில் தென்மாவட் டங்களுக்கு கடத்தி வந்து விளாத்திகுளம் மட்டுமின்றி பல பகுதிகளில் உள்ள பெட்டிக்கடை களுக்கு மொத்தமாகவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் போன்ற சிறார்களுக்கு சில்லறையாகவும் விற்பனை செய்து வருவதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

    • தனிப்படை போலீசார் குளத்தூர் முத்துக்குமாரபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • புகையிலை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் குளத்தூர் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் குளத்தூர் முத்துக்குமாரபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான முறையில் சாக்கு மூட்டைகளுடன் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் முத்துக்குமாரபுரம் வடக்கு தெருவை சேர்ந்த பெருமாள்(52), குளத்தூர் பெரியார் நகரை சேர்ந்த மாரியப்பன்(38) மற்றும் வெள்ளாரம் பகுதியை சேர்ந்த செல்வம் (65) என்பதும், அவர்கள் முத்துக் குமாரபுரம் பகுதியில் உள்ள ஆட்டுக்கொட்டகையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்ட விரோத விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

    உடனே தனிப்படை போலீசார், மாரியப்பன், பெருமாள் மற்றும் செல்வம் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.1.86 லட்சம் மதிப்புள்ள 254 கிலோ புகையிலை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×