என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லால்குடியில் ஜல்லிக்கட்டு போட்டி- விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்16 Feb 2020 3:04 PM GMT (Updated: 16 Feb 2020 3:04 PM GMT)
திருச்சி மாவட்டம் லால்குடியில் இன்று நடைபெற்ற ஜல்லிக் கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.
லால்குடி:
திருச்சி மாவட்டம் லால்குடி மகா மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அமைச்சர் வளர்மதி, அ.தி.மு.க. திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல், முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி, ஆர்.டி. ஓ. ராமன், லால்குடி ஒன்றிய செயலாளர் சூப்பர் டி. என்.டி.நடேசன், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போட்டியில் சுமார் 600 காளைகள் பங்கேற்றன. 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளையும் இந்த போட்டியில் பங்கேற்றது. சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் பலர் துணிச்சலுடன் அடக்கினர்.
கொம்பன் உள்ளிட்ட சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் பாய்ந்து சென்றன. போட்டியை திரளான பொதுமக்கள் கண்டு களித்தனர். மருத்துவக்குழுவினர் அங்கு முகாமிட்டிருந்தனர். காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
போட்டியையொட்டி லால்குடி டி.எஸ்.பி. ராஜ சேகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story
×