என் மலர்

  செய்திகள்

  ஜிகே வாசன்
  X
  ஜிகே வாசன்

  டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்- ஜி.கே. வாசன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்ட அனைவரையும் கண்டுபிடித்து மீண்டும் முறைகேடு நடக்காமல் தடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
  உடுமலை:

  த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் உடுமலை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

  மத்திய அரசின் பட்ஜெட் நம்பிக்கை ஏற்படுத்துவதாக உள்ளது. விவசாயம், சுகாதாரம், மகளிர் மேம்பாடு, கட்டுமானம், சிறு, குறு தொழில்கள், வர்த்தகம் என அனைத்து துறைகளுக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

  இதனை முறையாக செயல்படுத்தி நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

  டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்ட அனைவரையும் கண்டுபிடிக்க வேண்டும். மீண்டும் முறைகேடு நடக்காமல் தடுக்க வேண்டும். கொரோனா வைரஸ் காரணமாக கேரள மாநிலத்தில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கேரளாவில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பழனி கோவிலுக்கு வருகிறார்கள். எனவே மாநில எல்லையில் மருத்துவ குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். பி.ஏ.பி. திட்ட ஒப்பந்த அடிப்படையில் இடைமலையாறு அணையை கேரள அரசு கட்டிய நிலையில் ஆனைமலையாறு கட்டப்படாமல் உள்ளது.

  இந்த அணையை கட்டி 3.5.டி.எம்.சி. நீர் விவசாயிகளுக்கு கிடைக்க செய்ய வேண்டும். தமிழகத்தில் சம்பா பருவ நெல் அறுவடை பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில் அனைத்து ஆயக்கட்டு பகுதிகளிலும் அரசு நெல் கொள்முதல் மையம் திறக்க வேண்டும்.

  5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனை பெற்றோர்களும், மாணவர்களும் எதிர்பார்த்தனர்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×