search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை மாநகராட்சி
    X
    சென்னை மாநகராட்சி

    சென்னையில் மேலும் 10 இடங்களில் நவீன நடைபாதை வளாகம் விரைவில் அமைக்க முடிவு

    தி.நகரைப் போல சென்னையில் மேலும் 10 இடங்களில் நவீன நடைபாதை வளாகம் விரைவில் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை தி.நகரில் உள்ள பாண்டி பஜார் பகுதியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் உலக தரம் வாய்ந்த நடைபாதைகள், சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மக்கள் பயன்படுத்துவதற்காக ஸ்மார்ட் பைக், பேட்டரி கார்கள், நவீன இருக்கை வசதிகள், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் வைபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    தி.நகரில் அமைக்கப்பட்டுள்ள நவீன நடைபாதை வளாகத்துக்கு பொதுமக்களிடையே பெரிதும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சென்னையில் மேலும் 10 இடங்களில் புதிதாக நவீன நடைபாதை வளாகம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

    புரசைவாக்கம் நெடுஞ்சாலை, வேளச்சேரி பைபாஸ் ரோடு, திருவான்மியூர், தண்டையார்பேட்டை, அண்ணாநகர் 2-வது மெயின் ரோடு உள்ளிட்ட 10 இடங்களில் நவீன நடைபாதை வளாகம் விரைவில் அமைக்கப்படுகிறது. இதற்காக மாநகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி தலைமை பொறியாளர் (சிறப்பு திட்டம்) நந்தகுமார் கூறியதாவது:-

    தி.நகர் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நவீன நடைபாதை வளாகத்துக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் பொது மக்களிடையே சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இதைப்போல் சென்னை மாநகரம் முழுவதும் மேலும் 10 இடங்களில் புதிய நவீன நடைபாதை வளாகம் விரைவில் அமைக்கப்படும்.

    தண்டையார்பேட்டை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, அண்ணாநகர் 2-வது மெயின்ரோடு, திருவான்மியூர், வேளச்சேரி பைபாஸ் ரோடு உள்பட 10 இடங்களில் இந்த நவீன நடைபாதை வளாகம் உருவாக்கப்படும்.

    வேளச்சேரி, திருவான்மியூர் பைபாஸ் சாலையில் நடைபாதை வளாகம் அமைக்க நெடுஞ்சாலைத் துறையிடம் தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. நவீன நடைபாதை வளாகம் அமைக்கப்படுவதன் மூலம் சென்னை மாநகரம் மேலும் அழகு பெரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×