search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
    X
    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    இடைத்தேர்தல் முடிவு அதிமுகவிற்கு பலமாகவும், திமுகவுக்கு பாடமாகவும் அமையும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் தி.மு.க.விற்கு பாடமாகவும், அ.தி.மு.க.விற்கு பலமாகவும் அமையும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
    களக்காடு:

    களக்காடு ஒன்றியம் கருவேலங்குளம் கிராமத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் அமையும். இடைத்தேர்தல் முடிவுகள் தி.மு.க.விற்கு பாடமாகவும், அ.தி.மு.க.விற்கு பலமாகவும் அமையும். ஜெயலலிதாவின் திட்டங்கனை நிறைவேற்றும் நல்லாட்சியை எடப்பாடி பழனிசாமி அரசு செய்து வருகின்றது.

    இந்த அரசு மீது ஸ்டாலின் கூறும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை மக்கள் நம்ப தயாராக இல்லை. ஸ்டாலின் அடிக்கடி சொல்கின்ற ஒரு வார்த்தை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும். அமைச்சர்கள் ஊழல் செய்கின்றனர் என்று கூறி வருகின்றார். எங்களை பார்த்து ஒருவிரலை நீட்டி பேசும் ஸ்டாலின் அவரது பக்கம் நான்கு விரல் திரும்பி நிற்கின்றது என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.

    எடப்பாடி பழனிசாமியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்டாலின் சொல்வதில் எந்த லாஜிக்கும் கிடையாது. தமிழக முதல்வர் மத்திய அரசின் அனுமதி பெற்று வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார். வெளிநாடு பயணம் குறித்து அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு ஸ்டாலின் பேசி வருவது கண்டிக்கதக்கது. அமைச்சர்கள் பற்றி சீமான் பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது.

    முதலில் ஏதாவது ஒரு கவுன்சிலர் தேர்தலில் நின்று சீமான் ஜெயிக்கட்டும். பிறகு அமைச்சர்கள் பற்றி விமர்சனம் செய்ய சொல்லுங்கள். ஜெயலலிதா பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர் மரணத்தை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கின்றார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. விசாரணை நடைபெற்று வருகின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×