search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனி அரசு ஆஸ்பத்திரியில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிவார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
    X
    பழனி அரசு ஆஸ்பத்திரியில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிவார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.

    பழனியில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் - ஆஸ்பத்திரியில் கூட்டம் அதிகரிப்பு

    பழனியில் 3 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    பழனி:

    பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 50 முதல் 100 நோயாளிகள் காய்ச்சலால் வந்த வண்ணம் இருந்தனர். தற்போது இந்த நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. 100 பேரில் ஒருவருக்கு டெங்கு அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அவ்வாறு டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு பழனி அரசு ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ஒரு சிலர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாலசமுத்திரத்தை சேர்ந்த சுதாமேரி(வயது28), காமு(22) மற்றும் ஒரு சிறுமி ஆகிய 3 பேருக்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    அவர்களுக்கு டெங்கு இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பழனி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் குணமாகாத பட்சத்தில் அவர்களுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.



    Next Story
    ×