search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.29,744-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சர்வதேச பொருளாதார சூழல், உலக சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

    பல்வேறு காரணங்களால் கடந்த 1 மாதமாகவே தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்தது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு பவுனுக்கு ரூ.29 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை அடைந்தது.

    அதன்பிறகும் விலை உயர்ந்த வண்ணம் இருந்தது. நேற்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.3702-க்கும், ஒரு பவுன் ரூ.29,616-க்கும் விற்பனையானது.

    இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ஒரு கிராம் ரூ.3,718-ஆக அதிகரித்தது. ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.128 உயர்ந்து ரூ.29, 744-க்கு விற்பனையானது.

    வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ.52 ஆக இருந்தது. இன்று கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூ.52.40-க்கு விற்பனையானது.

    கடந்த 2 வாரங்களில் மட்டும் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. தற்போது ரூ.30 ஆயிரத்தை நெருங்கி உள்ள நிலையில் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வர இருப்பதால் தங்கம் விலை மேலும் உயரவே வாய்ப்புள்ளது.
    Next Story
    ×