என் மலர்

  செய்திகள்

  கொலை
  X
  கொலை

  புதுவண்ணாரப்பேட்டையில் ரவுடி வெட்டிக்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுவண்ணாரப்பேட்டையில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ராயபுரம்:

  புதுவண்ணாரப்பேட்டையில் சென்னை துறைமுக பொறுப்புக் கழக குடியிருப்பு அருகே காலி மைதானத்தில் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

  அவரை மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, கொலை செய்யப்பட்டது பிரபல ரவுடி சுரேஷ் என்கிற டகுல் சுரேஷ் என்பது தெரிய வந்தது.

  இவர் மீது காசிமேடு, தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அவரது உடலை போலீசார் கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இதற்கிடையே தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே சந்தேகத்துக்கு இடமாக நின்ற வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் புது வண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவைச் சேர்ந்த தமிழரசன் என்பதும், ரவுடி டகுல் சுரேசை 5 பேருடன் சேர்ந்து நேற்று இரவு வெட்டிக் கொலை செய்ததும் தெரிய வந்தது.

  முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது. இதையடுத்து தமிழரசனை கைது செய்தனர். 5 பேரை தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×